டிக்கெட்டோடு சேர்த்து மாஸ்க்கையும் கண்டக்டரிடம் வாங்கிக்கொள்ளலாம்: அமைச்சர்

தமிழகத்தில் இன்று முதல் முழு அளவில் பேருந்துகள் இயங்க தொடங்கியுள்ள நிலையில், பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தமிழகத்தில் இன்று முதல் முழு அளவில் பேருந்துகள் இயங்க தொடங்கியுள்ள நிலையில், பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாஸ்க் இல்லாத பயணிகள் கண்டக்டரிடம் டிக்கெட் எடுக்கும் போது கூடுதலாக ஐந்து ரூபாய் கொடுத்து மாஸ்க் வாங்கிக் கொள்ளலாம் என்றும் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் அவர்கள் தெரிவித்துள்ளார் 

பேருந்து இயங்குவது குறித்து இன்று கரூரில் ஆய்வு செய்த அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் என்றும் ஒருவேளை மாஸ்க் அவர்களிடம் இல்லை என்றால் கண்டக்டரிடம் ஐந்து ரூபாய் கொடுத்து வாங்கிக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

பயணிகளுக்கு தேவையான அளவுக்கு மாஸ்க் கண்டக்டரிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். எனவே பேருந்தில் பயணம் செய்ய அவசரத்தில் மாஸ்க் எடுக்க மறந்து போனவர்கள் ஐந்து ரூபாய் மட்டுமே கண்டக்டரிடம் செலுத்தி மாஸ்க் வாங்கிக் கொள்ளலாம் என்பது குறிப்பிடதக்கது. தமிழக அரசின் இந்த ஏற்பாட்டுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web