தொழிலாளர்களின் கருத்தை கேட்காமலேயே "ஃபோர்டு கார் தொழிற்சாலை மூட" நிர்வாகம் முடிவு!!

தொழிலாளர்களின் கருத்தை கேட்காமலேயே ஃபோர்டு கார் தொழிற்சாலையை மூட நிர்வாகம் முடிவு எடுத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது
 
ford

தற்போது நம் தமிழகத்தில் பல்வேறு விதமான தகவல்கள் வெளியாகிக் கொண்டே வருகிறது. மேலும் பல தகவல்கள் மக்களுக்கு மிகவும் பிரயோஜனமாக காணப்படுகிறது. ஆனால் சில தினங்கள் முன்பாக ஒரு அதிர்ச்சிகரமான தகவல் வெளியானது. அது என்னவென்றால் பிரபல கார் நிறுவனமான ஃபோர்டு தனது தொழிற்சாலையை மூட முடிவெடுத்துள்ளதாக கூறியுள்ளது.ford

மேலும் புதிய மாடல்களில் விற்பனையும் குறைவாக உள்ளதால் இத்தகு முடிவெடுக்கப் பட்டதாகவும் கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து தற்போது சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி ஃபோர்டு  தொழிற்சங்கம் சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளது. அதன்படி தொழிலாளர்களின் கருத்தை கேட்காமலேயே ஃபோர்டு  கார் தொழிற்சாலையை மூட நிர்வாகம் முடிவு எடுத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

மேலும் ஃபோர்டு  தொழிற்சாலையை மூடும் நிர்வாகத்தின் முடிவு தொழிலாளர்களுக்கு பேர் அதிர்ச்சி அளிக்கிறது என்றும் ஃபோர்டு  தொழிற்சங்கம் கூறியுள்ளது. ஃபோர்டு  தொழிற்சாலை மூடப்படுவதால் நேரடியாக 4100 தொழிலாளர்களும், மறைமுகமாக 25,000 பேர் பாதிக்கப்படுவர் என்றும் கூறப்படுகிறது ஃபோர்டு  ஆலையை மூடும் நிர்வாகத்தின் முடிவுக்கு தமிழக அரசு ஒப்புதல் அளிக்கக் கூடாது என கடிதம் மூலம் தெரிவித்துள்ளனர் ஃபோர்டு  தொழிற்சங்கம்.

From around the web