"16 மீனவர்கள் மாயம்";கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் பதில் இல்லை!

டவ் தே புயலால் கடலில் காணாமல் போன 16 மீனவர்களை விரைந்து கண்டுபிடிக்க நடவடிக்கை தேவை என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்!!
 
fishers

சில நாட்கள் முன்பு நான் அரபிக்கடலில் டவ் தே என்ற புயல் ஒன்று உருவானது. இந்தப் புயலின் பாதிப்பால் மும்பை மாநகரமே மிகவும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது என்றே கூறலாம். மேலும் பல பகுதிகளில் மரங்கள் வேரோடு பிடுங்கப்பட்டு மட்டுமின்றி மின் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன. அதை தொடர்ந்து கேரளாவிலும் இந்த புயலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. கேரளாவில் உள்ள பல பகுதிகளில் வீடுகள், தமிழகத்தில் நீலகிரி கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் இந்த புயலின் பாதிப்பு மிகவும் அதிகமாக இருந்தது என்றே கூறலாம்.rajnath singh

மேலும் கன்னியாகுமரி வீட்டின் மேற்கூரை விழுந்து சிறுமி ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த டவ் தே புயலானது இறுதியாக குஜராத் மாநிலத்தில் ஆட்கொண்டு அங்கு மிகப்பெரிய சேதத்தை விளைவித்தது. அதனால் குஜராத்திற்கு உடனடியாக பாரத பிரதமர் நரேந்திர மோடி ஆயிரம் கோடி ரூபாய் நிதியை ஒதுக்கினார்.. மேலும் இந்த புயலில் சில மீனவர்கள் கடலில் இருந்தனர். அவர்கள் தற்போது மாயமானதாக கூறப்படுகிறது அதில் குறிப்பாக தமிழக மீனவர்கள் 16 பேரும் மாயமானது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் நமது முக ஸ்டாலின் இந்த டவ் தே புயலால் கடலில் காணாமல் போன 16 மீனவர்களை விரைந்து கண்டுபிடிக்க நடவடிக்கை தேவை என்று ராஜ்நாத் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார். பாதுகாப்பு துறை அமைச்சராக உள்ள ராஜ்நாத் சிங்குக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு வலியுறுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் மீனவர்கள் கண்டுபிடிக்க கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு கோரிக்கை வைத்தும் பதில் இல்லை என்றும் முதல்வர் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்,

From around the web