சரசரவென சவரனுக்கு விலை குறைந்தது "தங்கம்"!!

சரசரவென்று தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ஆக குறைந்துள்ளது
 
gold

தற்போது வரை நம் தமிழகத்தில் ஓரளவு ஊரடங்கு காணப்படுகிறது. மேலும் சில வாரங்களுக்கு முன்பாக நம் தமிழகத்தில் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது இதனால் பல வியாபாரிகள் மிகவும் பாதிப்புக்கு உள்ளானர். மேலும் அவர்களின் வியாபாரமும் அதிகமாக பாதிப்பது மட்டுமின்றி அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. காரணம் என்னவெனில் நம் தமிழகத்தில் எந்த கடைக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை இதன் விளைவாக தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்கள் வீடுதோறும் டோர் டெலிவரி மூலமாகவோ தெருக்களில் வியாபாரம் மூலமாகவோ விற்கப்பட்டது.gold

இந்த சூழலில் தற்போது தமிழகத்தில் கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டு சேர்த்து நகைக் கடைகளும் திறக்கப்பட்டன இதனால் தங்கத்தின் விலை உயர்ந்தும் குறைந்து காணப்பட்டது என வியாபாரிகள் மட்டுமின்றி வாங்கும் நுகர்வோர் களும் மிகுந்த பாதிப்பை உருவாக்கி அவர்களுக்கு குழப்பத்தை கொடுத்தது. இந்த சூழலில் தற்போது தங்கத்தின் விலையானது மிகவும் குறைவாக விற்கப்படுவதாக காணப்படுகிறது. அதன்படி தங்கத்தின் விலையானது சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து விற்கப்படுவதாக வருகிறது.

மேலும் சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலையானது 240 ரூபாய் குறைந்தது 36,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது மேலும் சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து 4500 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. அதோடு மட்டுமின்றி வெள்ளியின் விலையும் உயர்ந்து விற்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. அதன்படி சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 40 காசுகள் உயர்ந்து 71.90 ரூபாய்க்கு விற்பனை செய்வதாக கூறப்படுகிறது.

From around the web