வேல் யாத்திரை முடியும்போது தாமரை மலரும்; அண்ணாமலை

 


தமிழக பாஜகவினர் கடந்த இரண்டு நாட்களாக தமிழக அரசின் தடையையும் மீறி வேல் யாத்திரை நடத்துவதில் மும்முரம் காட்டி வருகின்றனர். நேற்று வேல் யாத்திரை தொடங்கப்பட்ட நிலையில் தமிழக பாஜக தலைவர் எல் முருகன் அவர்கள் கைதாகி பின்னர் விடுதலை செய்யப்பட்டார் 

இந்த நிலையில் இன்று மீண்டும் அவர் தடையை மீறி வேல் யாத்திரை நடத்த தொடங்கியுள்ளதாகவும் இதனால் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 

vel yatra

இந்த நிலையில் வேல் யாத்திரை குறித்து கருத்து கூறிய பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை அவர்கள் 2021 ஆம் ஆண்டு அரசியல் மாற்றத்திற்கு இந்த வேல் யாத்திரை மிகப்பெரிய பங்கு வகிக்கும் என்று கூறினார் மேலும் இந்த வேல் முடியும்போது தமிழகத்தில் தாமரை நிச்சயம் என்று அவர் கூறியுள்ளார்

வேல் யாத்திரை காரணமாக தமிழகத்தில் பாஜக மத்தியில் செல்வாக்கு ஏற்படும் என்று அண்ணாமலை கூறியிருப்பது எந்த அளவுக்கு உண்மை என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

From around the web