மோடி, கௌதமி உள்ளிட்ட பலபாஜகவின் நட்சத்திர பேச்சாளர் பட்டியல் வெளியானது!

சட்டமன்ற தேர்தலுக்கான தமிழகத்தில் பாஜகவின் நட்சத்திரப் பேச்சாளர் பட்டியல் வெளியானது!
 
மோடி, கௌதமி உள்ளிட்ட பலபாஜகவின் நட்சத்திர பேச்சாளர் பட்டியல் வெளியானது!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல்  ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது, இத்தேர்தலில் ஆளும் கட்சியான அதிமுக கட்சி தன்னுடன் பாமக கட்சியினை கூட்டணி வைத்துள்ளது. மேலும் மத்தியில் ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது. இதற்காக அதிமுக 20 தொகுதிகளை பாஜகவிற்கு வங்கியது. அதில் தாராபுரம் தொகுதியில் பாஜகவின் மாநில தலைவர் முருகன் போட்டியிடவுள்ளதாக வெளியானது. மேலும் 20 தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது.

modi


பாஜகவின் மாநில தலைவர் முருகன் வேட்புமனுவை தாக்கல் செய்தார். தற்போது பாஜக தனது நட்சத்திர பேச்சாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் பாரத பிரதமர் நரேந்திர மோடி நட்சத்திர பேச்சாளராக இருப்பார் என்றும் கூறியுள்ளது. மேலும் மத்திய அமைச்சர் நட்டா, அமித்ஷா, இப்ராஹிம், ராமலிங்கம் ,கௌதமி போன்றோர் நட்சத்திர பேச்சாளராக இருப்பார்கள் எனும் பாஜக தரப்பில் நட்சத்திரப் பேச்சாளர் பட்டியல் வெளியானது.


மேலும் மக்களவை இடைத்தேர்தலில் பாஜக சார்பில் முன்னாள் அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என அறிவித்தது. அதற்கான வேட்பு மனுவையும் அவர் தாக்கல் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

From around the web