"தமிழகத்தை குழந்தைத் தொழிலாளர் இல்லா மாநிலமாக உருவாக்குவோம்!"

தமிழகத்தில் இனி குழந்தை தொழிலாளர் இல்லாத மாநிலமாக  உருவாக்குவோம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார்
 
child labours

நம் தமிழகத்தில் தற்போது திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நடைபெறுகிறது. அந்தப்படியே நம் தமிழகத்தில் முதல்வராக உள்ளார் அக்கட்சியின் தலைவரான மு க ஸ்டாலின். மேலும் அவர் தமிழகத்தில் முதல் முறையாக முதல்வராக பொறுப்பேற்று உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் தேர்தல் அறிக்கையாக கூறிய அத்தனை வாக்குறுதிகளையும் தற்போது வரிசையாக நிறைவேற்றி மக்களது மனதில் நல்லதொரு இடத்தினை தக்க வைத்து வருகிறார்.stalin

 அவரது ஆட்சி குறித்து எதிர்க்கட்சிகள் , அவற்றின் கூட்டணி கட்சிகள் குறைகூறி வருகின்றனர். இந்நிலையில் தற்போது நம் தமிழகத்தில் ஊரடங்கு காலகட்டமான 11 மாவட்டங்களை தவிர இதர மாவட்டங்களில் தளர்வு காணப்படுகிறது. தற்போது தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் குழந்தை தொழிலாளர் பற்றி சில உறுதி கூறியுள்ளார். அதன்படி தமிழகத்தில் குழந்தை தொழிலாளர் இல்லாத மாநிலம் என்ற நிலையை கொண்டு வருவதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என்று நம் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கூறியுள்ளார்.

மேலும் நாளைய நவீன உலகத்தை உருவாக்கும் சிற்பிகள் நம் குழந்தைச் செல்வங்கள் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் குழந்தை தொழிலாளர் என்ற கொடுமையான வன்முறையிலிருந்து விடுவித்து கல்வியை உறுதி செய்வோம் என்றும் அவர் கூறியுள்ளார். இதனால் அவர் தற்போது தமிழகத்தில் உள்ள குழந்தைகளின் கல்வித் தரத்தை பற்றியும் மிகவும் சிந்தித்துக் கொண்டிருக்கிறார் என்று தெரிய வந்துள்ளது. இதனால் பல தரப்பிலிருந்தும் இவருக்கு வாழ்த்துக்கள் வந்த வண்ணமாக உள்ளன.

From around the web