தமிழகத்தை உலகம் திரும்பிப் பார்க்கும் மாநிலமாக மாற்றுவதே தனது வாழ்நாள் லட்சியம் என்று கூறும் உலகநாயகன்!

கோவை மாவட்டம் சிங்காநல்லூரில் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்ட உலகநாயகன் கமலஹாசன்!
 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதற்காக தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் பல கட்சிகளுடன் கூட்டணி வைத்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளனர்.  ஆளும் கட்சி அதிமுக உடன் பாஜக பாமக கூட்டணி அமைத்து  சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளன. மேலும் எதிர்க் கட்சியான திமுக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளது.

mnm

மக்கள் மனதில் உலகநாயகன் என்றழைக்கப்படும் கமலஹாசன் கட்சி ஒன்றிய தொடக்கி, அவரது கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் என்ற பெயரினையும் வைத்திருந்தார். மேலும் கட்சியில் தலைவராகவும் இருக்கிறார். இந்நிலையில் அவர் சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் அதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் அவர் தமிழகத்தில் பல பகுதிகளில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி அவர் கோவை மாவட்டம் சிங்காநல்லூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்பொழுது அவர் கூறினார் தமிழகத்தை உலகம் திரும்பிப் பார்க்கும் மாநிலமாக மாற்றுவதே எனது வாழ்நாள் லட்சியம் என்று கூறினார். மேலும் அவர் தமிழகத்தின் வளர்ச்சிக்காக சுமைகளை ஏற்கத் தயார் எனவும் கூறினார். மேலும் தமிழகத்தை உலகமே திரும்பிப் பார்க்க வைப்பேன் எனவும் தேர்தல் பிரச்சாரத்தில் கமலஹாசன் கூறினார்.

From around the web