ஹெலிகாப்டரில் சென்று வேட்பாளருக்கு பல்லாக்கு தூக்குவதாக உலகநாயகன் கூறுகிறார்!

ஏழைகளை வறுமைக் கோட்டிலிருந்து செழிப்பு கோட்டிருக்கு தூக்கி நிறுத்துவதே மக்கள் நீதி மய்யத்தின் நோக்கம்!
 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதற்கு பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி வைத்து சட்டமன்ற தேர்தலை சந்திக்கின்றன. மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன.கட்சிகளின் மத்தியில் தமிழகத்தில் எந்த கூட்டணியில் உள்ள 234 தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவித்து நாம் தமிழர் கட்சி 117 ஆண் வேட்பாளர்களும்  117 பெண்களும் உள்ளனர்.  மக்கள் மத்தியில் உலகநாயகன் என்று அழைக்கப்படும் நடிகர் கமலஹாசனும் 2021 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தலை முதன்முதலாக சந்திக்க உள்ளார்.

mnm

மேலும் அவர் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட உள்ளார். மேலும் அவர் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் தொடங்கி அக்கட்சிக்கு தலைவராகவும் உள்ளார்.  அவரது கட்சியின் கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி என்று அழைக்கப்படும் சரத்குமாரின் கட்சியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  உலக நாயகன் கமலஹாசன் தமிழகத்தில் உள்ள பல பகுதிகள் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்.

மேலும் அவர் ஒவ்வொரு தொகுதிகளிலும் ஹெலிகாப்டரில் மூலம் சென்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருக்கிறார். மேலும் அவர் ஹெலிகாப்டர் பயணத்தை பற்றி கூறினார்.வேட்பாளருக்கு பல்லாக்கு தூக்கவே ஹெலிகாப்டர் பயணம் எனவும் உலக நாயகன் கமலஹாசன் அதற்கு விளக்கமளித்தார். மேலும் ஏழைகளை வறுமைக் கோட்டிலிருந்து செழிப்பு கோட்டிற்கு தூக்கி நிறுத்துவதே மக்கள் நீதி மய்யத்தின் நோக்கம் எனவும் அக்கட்சியின் தலைவர் கமலஹாசன் கூறியுள்ளார்.

From around the web