தலைநகரில் தலைவிரித்தாடும் கண்ணுக்கு தெரியாத கிருமி!

சென்னையில் இரண்டு மண்டலங்களில் தினசரி கொரோனா பாதிப்பானது இரண்டாயிரத்தை கடந்ததாக தகவல்!
 
தலைநகரில் தலைவிரித்தாடும் கண்ணுக்கு தெரியாத கிருமி!

தமிழக மக்கள் மத்தியில் கிராமப்புற மக்கள் மத்தியில் கிராமப்புற இளைஞர்கள் மத்தியில் சென்னைக்கு சென்றால் பிழைத்து விடலாம் என்ற எண்ணம் உள்ளது. அப்பேர்பட்ட சென்னை வந்தாரை வாழவைக்கும் என்றும் அழைக்கப்படுகின்றனர். மேலும் சிங்காரச் சென்னை என்றும் சென்னை ஆனது எல்லோராலும் அன்புடன் அழைக்கப் படுகிறது. சென்னையில் சுற்றுலா தளங்களும் உள்ளன. மேலும் மால்கள் கேளிக்கை விடுதிகளும் உள்ளன. சென்னையிலுள்ள மெரினா கடற்கரை ஆனது அனைத்து தரப்பு மக்களாலும் சுற்றுலாத்தலமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு சந்தோஷம் மகிழ்ச்சி அளிக்கிறது.

corona

அப்பேர்பட்ட சென்னையில் தற்போது கொரோனா  தாக்கம் தலைவிரித்து ஆடுவது மிகுந்த வேதனை அளிக்கிறது. மேலும் தனது சென்னை மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களிலும் கொரோனா  தாக்கம் தலைவிரித்தாடுகிறது. குறிப்பாக திருச்சி மதுரை திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் இந்நோயின் தாக்கம் ஆனது கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அடுத்தடுத்து அதிகரித்து வருகிறது. அதன்படி தற்போது சென்னையிலுள்ள இரண்டு மண்டலங்களின் தினசரி பாதிப்பானது இரண்டாயிரத்தை கடந்ததாக அளித்துள்ளது.

மேலும் சென்னையிலுள்ள தேனாம்பேட்டை மண்டலத்தில் ஒரே நாளில் 2109 பேருக்கு கொரோனா உறுதியாக உள்ளதாக தகவல் வெளியானது. இதனை அடுத்து சென்னை அண்ணாநகர் மண்டலத்தில் ஒரே நாளில் கொரோனா தொற்றானது 2037 பேருக்கு உறுதி செய்யப்பட்டதாக தகவல். இதனால் இவ்விரு மண்டலங்களும் தினசரி பாதிப்பானது 2000 கடந்து வேதனையளிக்கிறது. மேலும் சென்னையில் உள்ள ஏழு மண்டலங்களில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பானது ஆயிரத்தை கடந்து மக்களுக்கு வேதனையை கொடுத்துள்ளது.

From around the web