இந்திய மருத்துவ கவுன்சில்:உருமாறிய கொரோனாவை இந்திய தடுப்பூசி சிறப்பாக எதிர்கொள்கிறது!

கோவாக்சின் தடுப்பூசி உருமாறிய கொரோனாவையும் சிறப்பாக எதிர்கொள்கிறது என்று இந்திய மருத்துவ கவுன்சில் அறிவித்துள்ளது!
 
இந்திய மருத்துவ கவுன்சில்:உருமாறிய கொரோனாவை இந்திய தடுப்பூசி சிறப்பாக எதிர்கொள்கிறது!

உலகில் தற்போது அனைத்து மக்களாலும் பேசப்படும் வாய்மொழியாக காணப்படுகிறது கொரோனா வைரஸ். கொரோனா முதன் முதலில் சீனாவில் தொடங்கி அதன் பின்னர் உலகம் முழுவதும் கொரோனா பரவியது. மேலும் உலக நாடுகள் அனைத்தும் இதற்காக பல்வேறு தடுப்பூசிகளை கண்டுபிடித்து வருகின்றனர் மேலும் அவை நடைமுறையில் உள்ளது. மேலும் இந்தியாவிலும் இந்த ஆட்கொல்லி நோயாக கொரோனா, இரண்டு விதமான தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு அவை மத்திய அரசின் சார்பில் இந்தியாவில் உள்ள பல அரசு மருத்துவமனைகளில் கொடுத்து வழங்கப்படுகிறது.

covaxin

அதன்படி இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா தடுப்பூசிகளில் ஒன்றான கோவாக்சின்  தடுப்பூசி மிகவும் புகழ்பெற்றதாக காணப்படுகிறது. மேலும் இந்த கோவாக்சின் தடுப்பூசினையே மக்களும் போட்டுக் கொள்ள விரும்புவதாகவும் சில தினங்கள் முன்பு கூறப்பட்டது. மேலும் இந்த கோவாக்சின் இந்தியா மட்டுமின்றி இங்கிலாந்து பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன. சில தினங்களாக இந்தியாவில் கோவாக்சின் தட்டுப்பாடுகள் காணப்பட்டது மிகுந்த சோகத்தை அளிக்கிறது.

ஆயினும் தற்போது ஹைதராபாத் மற்றும் பெங்களூருவில் பாரத பயோடெக் நிறுவனம் ஆனது இத் தடுப்பூசியை உற்பத்தி இருப்பதாக கூறியுள்ளது இந்நிலையில் இந்த சிறப்பு பெற்ற கோவாக்சின் தடுப்பூசி ஆனது உருமாறிய கொரோனாவை எதிர்க்கிறது என்றும் கூறப்படுகிறது. இதனை இந்திய மருத்துவ கவுன்சில் கூறியுள்ளது. அதன்படி உருமாறிய கொரோனாவை சிறப்பாக எதிர்கொள்கிறது என்று கூறியுள்ளது. மேலும் உருமாறிய உருமாறிய கொரோனாவை சிறப்பாக எதிர்கொள்வது குறித்த ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளதாக ஐசிஎம்ஆர் தகவல் அளித்தது.

From around the web