தாலி கட்டிய அடுத்த நிமிடம் ரத்த தானம் செய்த மாப்பிள்ளை!

திருமணத்தில் தாலியை கட்டியவுடன் அடுத்த நிமிடமே இரத்ததானம் செய்ய மாப்பிள்ளை கிளம்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. அப்போது திருமணம் நடந்து கொண்டிருந்தபோது பக்கத்து வீட்டு சிறுமி ஒருவரின் சிகிச்சைக்காக ரத்ததானம் தேவைப்படுவதாகவும் அந்த சிறுமிக்கு இரத்ததானம் கொடுக்க யாரும் முன்வரவில்லை என்றும் கூறப்பட்டது.
சிறுமியின் ரத்த வகையும் தனது ரத்த வகையும் ஒரே வகை என்பதை அறிந்த மாப்பிள்ளை உடனடியாக திருமணத்தை முடித்து தாலி கட்டியவுடன் அடுத்த நிமிடமே அந்த சிறுமிக்கு ரத்ததானம் செய்யக் கிளம்பி விட்டார்
சிறுமியின் சிகிச்சைக்காக ரத்ததானம் செய்ய யாரும் முன்வராத நிலையில் திருமணமான ஒரு சில நிமிடங்களிலேயே ரத்த தானம் செய்த அந்த இளைஞருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. சமூக வலைதளங்களில் காவல்துறையினர் உட்பட பலர் அந்த இளைஞருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்
மேலும் அந்த இளைஞர் மணக்கோலத்தில் ரத்ததானம் கொடுத்துக்கொண்டிருக்கும் புகைப்படமும் அவரது அருகில் அவரது புது மனைவி இருக்கும் புகைப்படமும் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது