ஒட்டுக்கேட்பு பிரமாண பத்திரம்"-ஒன்றிய அரசு மறுப்பு!!

பெகாசஸ் மூலம் செல்போன் ஒட்டுக்கேட்பு தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய ஒன்றிய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது
 
government

சில தினங்களாக நம் இந்தியாவில் அதிகளவு தனிப்பட்ட சுதந்திரம் பறிக்கப்பட்டு வருகிறது. அதுவும் குறிப்பாக அனைவரின் மொபைல் போன்கள்  ஒட்டு கேட்கப்படுவது தெரியவந்துள்ளது. இது குறித்து சில தினங்கள் முன்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராகுல் காந்தி கூறியிருந்தார். இந்நிலையில் இந்த ஒட்டுக் கேட்பு பிரமாண பத்திரத்தில் மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி மூலம் செல்போன்ஒட்டுக் கேட்கப்படுவது தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய ஒன்றிய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.superme court

பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய முடியாது என்று ஒன்றிய அரசு கூறுவதை ஏற்க முடியாது என்று தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் ஒட்டு கேட்டு பற்றிய பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டியதில்லை என்று ஒன்றிய அரசு  உச்ச நீதிமன்றம் கூறியது அதிருப்தி தெரிவித்துள்ளது. விதிகளை மீறி செல்போன் கேட்கப்படுவது நடக்கவில்லை என்றும் விதி மீறி யாரும் உளவு பார்க்கப் படவில்லை என்றும் மத்திய அரசு மறுப்பு தெரிவித்தது.

விதிகளை மீறி ஒட்டுக்கேட்பது நடக்கவில்லை என நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு கூறியுள்ளதாக அரசு தலைமை வழக்கறிஞர் தகவல் அளித்துள்ளார், மேலும் ஒட்டு கேட்டு குறித்து விசாரிக்க நிபுணர் குழுவை அமைக்க ஒன்றிய அரசு தயார் என்று அரசு தலைமை வழக்கறிஞர் முன்வைத்தார். தேசிய பாதுகாப்பு பிரச்சினைகள் செல்ல உச்ச நீதிமன்றம் விரும்பவில்லை என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் தேசிய பாதுகாப்பு பிரச்சனைகள் செல்ல ஒன்றிய அரசின் செயல்பாடுகள் குறித்து விரிவான பதில் தங்களுக்கு தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. பொதுமக்கள் பலர் தங்கள் செல்போனில் ஒட்டுக் கேட்கப்படுவதாக தெரிவித்துள்ளனர் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. செல்போனில் ஒட்டுக் கேட்க செயல்படுகிறதா? இல்லையா ?என்பது தெரிய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் விட்டால் மட்டுமே உளவு பார்க்க செயலி பயன்படுத்தப்பட்டதா என்று தெரியவரும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

From around the web