ஒரு வழியா உலகளாவிய டெண்டர் கோரியது தமிழக அரசு!ஆன் லைன் ஆஃப் லைன் மூலமாக டெண்டர்!

கொரோனா தடுப்பூசிகள் விநியோகத்திற்கு உலகளாவிய டெண்டர் கோரியது தமிழக அரசு!
 
ஒரு வழியா உலகளாவிய டெண்டர் கோரியது தமிழக அரசு!ஆன் லைன் ஆஃப் லைன் மூலமாக டெண்டர்!

தமிழகத்தில் தற்போது பத்தாண்டுக்கு பின்னர் மீண்டும் ஆட்சியை தன் வசமாக பிடித்துள்ளது திராவிட முன்னேற்ற கழகம் என்று அழைக்கப்படும் திமுக. மேலும் திமுக கட்சியின் சார்பில் முதல்வர் வேட்பாளராக அக்கட்சியின் தலைவரான மு க ஸ்டாலின் அறிவிக்கப்பட்டார், அவர் தான் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தற்போது எம்எல்ஏவாக, முதல்வராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் தேர்தலுக்காக தான் கூறியிருந்த ஒவ்வொரு தேர்தல் அறிக்கையும் அடுத்தடுத்து நிறைவேற்றி வந்து மக்கள் மனதில் நல்லதொரு இடத்தை தக்க வைத்துள்ளார்.stalin

இதனால் பலரும் இவரது ஆட்சியை குறித்து விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் இவர் மத்திய அரசிடம் கொரோனா தடுப்பு மருந்துகளை ஆக்சிசன் போன்றவற்றை கோரியிருந்தார். ஆனால் மத்திய அரசானது அவர் கேட்ட அளவிற்கு இல்லாமல் ஓரளவிற்கு தடுப்பு மருந்துகளையும் ஆக்சிஜனையும் வழங்கியுள்ளது. இதனால் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உலக அளவில் உதவி கோர எண்ணியுள்ளார். தொடர்ந்து தற்போது தடுப்பூசிகள் விநியோகத்திற்கு உலகளாவிய டெண்டர் கோரியது தமிழக அரசு என்ற தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இதனை முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டதை தொடர்ந்து உலகளாவிய டெண்டர் கோரியதாகதகவல் வெளியாகி உள்ளது. மேலும் தமிழகத்திற்கு கொரோனா தடுப்பூசி வினியோகம் செய்ய சர்வதேச நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் தமிழக அரசின் சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் ஜூன் 5ஆம் தேதி காலை 11 மணி வரையிலான  ஆன் லைன் ஆஃப் லைன் மூலமாக டெண்டர் கோரலாம் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது. மேலும் 18 வயது முதல் 45 வயதிற்கு செலுத்த ஒருநாள் தடுப்பூசியை பெற டெண்டர் கோரப்பட்டுள்ளது.

From around the web