நல்ல செய்தி: "ஆக்சிசன் பற்றாக்குறை இல்லை" நோயாளிகள் பாதுகாப்பு!

அரசு மருத்துவமனைகளில் ஆக்சிசன் பற்றாக்குறை இல்லை என்று கூறுகிறார் புதுச்சேரி மாநில சுகாதார இயக்குனர்!
 
நல்ல செய்தி: "ஆக்சிசன் பற்றாக்குறை இல்லை" நோயாளிகள் பாதுகாப்பு!

தமிழகத்தில் சில நாட்களாக கொரோனாவின் தாக்கமானது மீண்டும் எழுந்துள்ளது. குறிப்பாக இவை இரண்டாவதுஅலையாக எழுந்துள்ளது. மேலும் இந்த நோயின் தாக்கம் ஆனது தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கில் கண்டறியப்படுகிறது. மேலும் தமிழகத்தில் சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டு கோயம்புத்தூர் திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் இந்நோயின் தாக்கம் ஆனது மிகவும் அதிகரித்துள்ளது வேதனை அளிக்கிறது. தமிழகத்தின் அண்டை மாநிலம் என்று கூறப்பட்டாலும் தமிழர்கள் வாழும் பகுதியாக காணப்படுகிறது புதுச்சேரி .இந்த புதுச்சேரியிலும் தமிழகத்தில் தமிழ் பேசும் மக்களும் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

remdesivir

மேலும் தமிழகத்தில் நடைபெற்ற அதே தினத்தில் புதுச்சேரியிலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்நோயின் தாக்கம் புதுச்சேரியிலும் மிகவும் அதிகமாக காணப்படுவது வேதனை அளிக்கிறது. மேலும் புதுச்சேரியில் ஆக்சிஜன் தேவை, தடுப்பூசிகள் குறித்து பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியது .மேலும் அவர்கள் திங்கள்கிழமை அறிக்கை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது. இந்நிலையில் தற்போது புதுச்சேரியில் சுகாதாரத்துறை இயக்குனர் சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.

அதன்படி புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லை எனவும் கூறியுள்ளார். அரசு மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகளில் ஆக்சிசன் வசதியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றுசுகாதாரத்துறை இயக்குனர் மோகன் குமார் கூறியுள்ளார். மேலும் புதுச்சேரி மாநிலத்தில் ரெம்டெசிவர் மருந்தும் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

From around the web