சிகரெட், பீடி விற்பனை செய்ய முதல்முறையாக தடை விதித்த மாநிலம்!

 

புகைக்கும் பொருள்களான பீடி மற்றும் சிகரெட், விற்பனையை தடை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். பீடி சிகரெட் பிடிப்பதால் புற்றுநோயால் பலரும் பாதிக்கப்படுவதாகவும், பீடி சிகரெட் பழக்கம் இல்லாதவர்களுக்கும் அந்த நோய் ஏற்படுவதாகவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர் 

மேலும் பீடி சிகரெட் விற்பனை அனுமதித்துவிட்டு அதையே உபயோகிப்பதால் உடல் நலத்திற்கு கேடு என்று விளம்பரம் செய்வதில் எந்தவிதமான பயனும் இல்லை என்றும் பீடி சிகரெட் விற்பனையை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன 

இந்த நிலையில் இந்தியாவிலேயே முதல் முறையாக பீடி சிகரெட்டுகளின் சில்லரை விற்பனைக்கு மகாராஷ்டிர மாநில அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது. பீடி மற்றும் சிகரெட்டுகளை மொத்த விற்பனைக்கு மட்டுமே அனுமதி என்று மகாராஷ்டிர மாநிலம் தெரிவித்துள்ளது

பீடி சிகரெட்டுக்கு இந்தியாவிலேயே முதல்முறையாக தடை விதித்தாலும் மொத்த விற்பனைக்கு மட்டும் அனுமதி அளித்துள்ளது சற்று குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்படியெனில் இனிமேல் பீடி சிகரெட் பழக்கம் உடையவர்கள் மொத்த விற்பனைக் கடையில் தான் சென்று வாங்க வேண்டுமா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக பீடி, சிகரெட்  விற்பனையை தடை செய்ய வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது

From around the web