12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வருகின்ற 16ஆம் தேதி முதல் செய்முறை தேர்வு தொடங்குகிறது!

கட்டுப்பாடுகள் மத்தியில் 16ஆம் தேதி முதல்  பன்னிரெண்டாம் வகுப்பு செய்முறை தேர்வு தொடங்குகிறது!
 
12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வருகின்ற 16ஆம் தேதி முதல் செய்முறை தேர்வு தொடங்குகிறது!

தமிழகத்தில் எப்பொழுதும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதத்திற்குள் நிறைவேற்றி விடும். ஆனால் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஆகியும் இன்னும் செய்முறைத்தேர்வு கூட நடைபெறவில்லை. காரணம் என்னவெனில் தமிழகத்தில் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த சட்டமன்ற தேர்தலில் தேதி ஆனது ஏப்ரல் 6-ஆம் தேதி ஆக இருந்ததால் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நாள் தள்ளிப் போடப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலும் நடைபெற்றது.

exam

ஆயினும் தமிழகத்தில் பொதுத்தேர்வு நடைபெறுமா?இல்லையா? என்ற குழப்பம் எழுந்திருந்தது. காரணம் என்னவெனில் தமிழகத்தில் சில வாரங்களாக கொரோனா தாக்கமானது தலைவிரித்தாடுகிறது. பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தேர்வு நடைபெறாது எனவும் பலரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் தற்பொழுது பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடைபெற உள்ளதாகவும் தேர்வுத்துறை தகவல் வெளியிட்டது. மேலும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வானது இந்த மாதம் 16 ஆம் தேதி நடைபெறும் எனவும் செய்முறை தேர்வு நடத்தி அதற்கான வழிமுறைகளையும் தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி தமிழகத்தில் 16ஆம் தேதி 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடைபெற உள்ளதால் ஆய்வகங்களில் மாணவர்கள் தனிநபர் இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் தேர்வுத்துறை அறிவித்துள்ளது .மேலும் ஆய்வகம் பொருட்களை கிருமிநாசினியால் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டுமெனவும் தேர்வுத்துறை ஆனது உத்தரவிட்டுள்ளது. மேலும் கொரோனா அறிகுறி உள்ள மாணவர்களை வேறு ஒரு நாளில் தேர்வு எழுத அனுமதி தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.  மேலும் செய்முறை தேர்வில் அனைவரும் முக கவசம் அணிவது வெப்பநிலையை பரிசோதிப்பது உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் தேர்வுத்துறை ஆனது கூறியுள்ளது.

From around the web