பதவியேற்றவுடன் தமிழிசை பிறப்பித்த முதல் உத்தரவு: முதல்வர் நாராயணசாமி அதிர்ச்சி!

புதுவை மாநில ஆளுநராக இன்று காலை பதவியேற்ற தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் சற்று முன் பிறப்பித்த உத்தரவால் புதுவை மாநில முதல்வர் நாராயணசாமி கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்
சற்று முன்னர் புதுவை மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் புதுச்சேரி காங்கிரஸ் அரசு வரும் 22ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்
இந்த உத்தரவின் காரணமாக முதல்வர் நாராயணசாமி மற்றும் அவரது தரப்பினர் கடும் அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 4 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்ததாக கூறப்படுகிறது
தற்போது முதல்வர் நாராயணசாமிக்கு ஆதரவாக 14 எம்எல்ஏக்களும், எதிர்க்கட்சிக்கு 14 எம்எல்ஏக்களும், என இரு தரப்பினரும் சம அளவில் உள்ளனர். வரும் 22ஆம் தேதிக்குள் முதல்வர் நாராயணசாமி தனது பெரும்பான்மையை நிரூபிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்