அண்ணா சிலை அருகே சுரங்கப்பாதை அமைப்பது தான் முதல் வேலை!

ஜீப்பில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபடும் திருச்சி கிழக்கு தொகுதி திமுக வேட்பாளர்!
 
அண்ணா சிலை அருகே சுரங்கப்பாதை அமைப்பது தான் முதல் வேலை!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இந்த மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது.தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. இந்த 234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் பலரும் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர். மேலும் தமிழகத்தில் தேர்தல் ஆணையம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.தமிழகத்தில் மிகவும் வலிமையான எதிர்க்கட்சியாக உள்ள திமுக, கம்யூனிஸ்ட் ,காங்கிரஸ் கட்சிகளை கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க உள்ளன.

dmk

திமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் கடந்த தேர்தலில் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் மீண்டும் தனது வேட்பு மனு தாக்கல் செய்து தொகுதியில் வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.  அவர் தமிழகம் முழுதும் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

திருச்சி கிழக்கு  தொகுதியில் திமுக சார்பில் வேட்பாளராக இனிகோ இருதயராஜ் அறிவிக்கப்பட்டார். இன்று காலை முதல் ஜீப்பில் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மேலும் தொகுதிக்குட்பட்ட கீழ சிந்தமணி, மேலசிந்தாமணி, தொப்ப குளம் பகுதிகளில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மேலும் அவர் கூறினார்.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் திருச்சி கிழக்கு தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அண்ணா சிலை அருகே சுரங்கப்பாதை அமைக்கப்படும் எனவும் அவர் கூறினார்.மேலும்  பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வையுங்கள் உங்களில் ஒருவனாக இருப்பேன் உங்கள் குடும்பத்தில் ஒருவனாக இருப்பேன் எனவும் அவர் கூறினார்.

From around the web