ஓட்டுனர் இல்லாத முதல் மெட்ரோ ரயில்: பிரதமர் இன்று தொடங்கி வைக்கிறார்

 

சென்னை உள்ளிட்ட முக்கிய பெருநகரங்களில் பயணிகளுக்கு வரப்பிரசாதமாக இருப்பது மெட்ரோ ரயில் என்பது அனைவரும் அறிந்ததே, குறைந்த கட்டணத்தில் எந்தவித போக்குவரத்து இடையூறுமின்றி சேரவேண்டிய இடத்திற்கு மிக குறுகிய காலத்தில் சென்று சேரும் வகையில் இந்த மெட்ரோ ரயில்கள் உதவிகரமாக இருக்கின்றன. சாலைகளில் போக்குவரத்து பாதிப்பால் திண்டாடி செல்வதை தவிர்க்கும் வகையில் இந்த மெட்ரோ ரயில் இருப்பதால் மெட்ரோ ரயிலுக்கு நாளுக்கு நாள் ஆதரவு அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

metro delhi

இந்த நிலையில் நாட்டின் முதல் முறையாக ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சேவை நாளை முதல் தொடங்குகிறது. ஓட்டுநர் இல்லாத இந்த மெட்ரோ ரயில் சேவையை டெல்லியில் பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த மெட்ரோ ரயிலில் புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதால் ஓட்டுநர் தேவைப்படாது என்பதும் தானியங்கி தொழில்நுட்பத்தின் மூலம் இந்த ரயில் இயங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 37 கி.மீ. தூரம் கொண்ட மெஜந்தா நிற லைன் மார்க்கம் மற்றும் பிங்க் நிற லைன் (மஜ்லிஸ் பூங்கா-ஷிவ் விஹார்) மார்க்கத்திலும் இந்த சேவை அறிமுகப்படுத்தப்படுகிறது.

From around the web