ஜூன் 14ஆம் தேதி முதல் ஊரடங்கு முடிவு! கூடுதல் தளர்வுகள் பற்றிய அலசல்;

தமிழ்நாட்டில் வரும் 14-ம் தேதி முதல் ஊரடங்கு முடிவு நிலையில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மீண்டும் நீடிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது!
 
lockdown

தற்போது தமிழகத்தில் ஒரு மாதம்  ஊரடங்கு தொடர்ந்து உள்ளது. காரணம் என்னவெனில் நம் தமிழகத்தில் இந்திய அளவிலேயே கொரோனா வின் பாதிப்பு அதிகமாக உள்ளதால் இத்தகைய கட்டுப்பாடுகள்  தமிழகத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுவும் குறிப்பாக தமிழகத்தின் மேற்குப் பகுதி மாவட்டங்களில் நோயின் தாக்கம் அதிகமாகவே காணப்படுவது மக்களுக்கு பெரும் சோகத்தை உருவாகியுள்ளது. முதல்வராக உள்ளார் மு க ஸ்டாலின். அவர்  தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று கூறியிருந்தார்.lockdown

அதன்படி தமிழகத்தில் தற்போது வரை ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இந்த ஊரடங்கு  வருகின்ற 14ஆம் தேதி முடிவு பெற உள்ளது. அதனால் தமிழகத்தில் ஜூன் 14 ஆம் தேதி இந்த ஊரடங்கும் முடியும் நிலையில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மீண்டும் நீட்டித்த வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன்படி தமிழகத்தில் சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படுமா? என்றும் கேட்கப்படுகிறது. மேலும் தமிழகத்தில் நீலகிரி கோவை திருப்பூர் ஈரோடு சேலம் நாமக்கல் கரூர் தஞ்சை திருவாரூர் நாகை மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் தளர்வுகள் எதுவும் இருக்காது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதே போல் மற்ற மாவட்டங்களில் நடை பயிற்சிக்கு அனுமதி, டாஸ்மார்க் கடைகளை திறந்து போன்ற தளர்வுகள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நிபந்தனைகளுடன் கூடிய கட்டுப்பாடுகளுடன் தனியார் நிறுவனங்கள் சிறு குறு தொழில் நிறுவனங்கள் இயங்க அனுமதி அளிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் பதினோராம் வகுப்பு சேர்க்கை நடைமுறைகள் பாடப்புத்தகம் வினியோகம் குறித்து அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web