கூலித் தொழிலாளிகளை ரூ.68000 செலவு செய்து விமானத்தில் சொந்த ஊர் அனுப்பிய விவசாயி!!

கொரோனாத் தொற்று மார்ச் மாதம் இந்தியாவில் கால் பதித்த நிலையில், கட்டுக்குள் கொண்டுவர் மார்ச் 24 ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 14 வரை ஊரடங்கானது பிறப்பிக்கப்பட்டது, 15 நாட்களேதானே ஊரடங்கு என சொந்த ஊர் திரும்பாமல் ஆங்காங்கே வேலை பார்த்துவந்த மக்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட, பண வசதி இல்லாத காரணத்தால் உணவிற்கு வழி இன்றி தவிக்கத் துவங்கினர், இதனால் பலரும் தங்களது சொந்த ஊர் நோக்கிப் பயணம் செய்தனர். சிலர் அதிர்ச்சியளிக்கும் வகையில் நடைபயணம், சைக்கிள்
 
கூலித் தொழிலாளிகளை ரூ.68000 செலவு செய்து விமானத்தில் சொந்த ஊர் அனுப்பிய விவசாயி!!

கொரோனாத் தொற்று மார்ச் மாதம் இந்தியாவில் கால் பதித்த நிலையில், கட்டுக்குள் கொண்டுவர் மார்ச் 24 ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 14 வரை ஊரடங்கானது பிறப்பிக்கப்பட்டது, 15 நாட்களேதானே ஊரடங்கு என சொந்த ஊர் திரும்பாமல் ஆங்காங்கே வேலை பார்த்துவந்த மக்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட, பண வசதி இல்லாத காரணத்தால் உணவிற்கு வழி இன்றி தவிக்கத் துவங்கினர்,

இதனால் பலரும் தங்களது சொந்த ஊர் நோக்கிப் பயணம் செய்தனர். சிலர் அதிர்ச்சியளிக்கும் வகையில் நடைபயணம், சைக்கிள் பயணம் என பலநூறு கிலோமீட்டர்களைக் கடந்தனர்.

இந்தநிலையில் டெல்லியைச் சாந்த விவசாயி ஒருவர்,  தன்னிடம் கூலி வேலை செய்து வந்த பீகாரைச் சார்ந்த 10 பேரை தனது சொந்த செலவில் பீகாருக்கு விமானத்தில் அனுப்பி வைத்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஆமாங்க 1993 ஆம் ஆண்டு துவங்கி 27 ஆண்டுகளாக டெல்லியில் காளான் விவசாயம் செய்துவரும் விவசாயி பாப்பன் சிங், தன்னிடம் வேலை பார்த்த 10 கூலி ஆட்களை சிறப்பு ரெயிலில் அனுப்பி வைக்கப் போராடியுள்ளார்.

கூலித் தொழிலாளிகளை ரூ.68000 செலவு செய்து விமானத்தில் சொந்த ஊர் அனுப்பிய விவசாயி!!

ஆனால் எவ்வளவு முயன்றும் சிறப்பு ரெயிலில் இடம் கிடைக்காததால், 10 பேருக்கும் முறைப்படி கொரோனா பரிசோதனை செய்து முடித்ததோடு, மருத்துவ தகுதி சான்றிதழ் பெற்றுக்கொடுத்துள்ளார். மேலும் 10 பேருக்கும் ரூ.68 ஆயிரம் செலவு செய்து விமாட டிக்கெட்டுகளை வாங்கிக் கொடுத்துள்ளார்.

மேலும் வழிச்செலவுக்காக ஒவ்வொருவருக்கு ரூ.3,000 கொடுத்து, தனது சொந்த வாகனத்தில் ஏர்போர்ட் வரை சென்று வழியனுப்பியுள்ளார். உண்மையில் இந்தச் சம்பவம் பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

From around the web