முதல்வராக உள்ள நிலையில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் பிரபல நடிகர்!

திமுக தலைவர் மு க ஸ்டாலின் நேரில் அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்!
 
stalin

ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை எண்ணப்பட்டது. இதில் தமிழகத்தில் அதிக தொகுதிகளை பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை  பிடித்துள்ளது திமுக. மேலும் திமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக அக்கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றுள்ளார். இதற்கு பல தலைவர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.mnm

மேலும் அவர் இன்னும் சில நாட்களில் முதல்வராக பதவி ஏற்க உள்ளார். இந்நிலையில் அவருக்கு தற்போது தோல்வியடைந்த ஒரு வேட்பாளர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. இவர் வேட்பாளர் மட்டுமின்றி மக்கள் மனதில் உலக நாயகனாகவும் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் யார் என்றால் தமிழ் சினிமாவின் மிகப் பெரிய நட்சத்திரமாக விளங்கும் உலகநாயகன் கமலஹாசன் ஆவார். அவர் இந்த சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக போட்டியிட்டு வெற்றி பெறுவார் என எதிர்பார்த்த நிலையில் கடைசி சில மணி நேரத்தில் பின்வகுத்து தோல்வியை சந்தித்தது மிகுந்த அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.

அதன்படி அவர் கோவை தெற்கு தொகுதியில் வேட்பாளராக களமிறங்கி இருந்தார். அவர் தொகுதியில் பாஜகவின் வேட்பாளரான வானதி சீனிவாசன் தோல்வியைத் தழுவினார் என்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.  தற்போது உலக நாயகன் கமல்ஹாசன் மு க ஸ்டாலின் முதல்வராக உள்ள நிலையில் தற்போது அவருடைய இல்லத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தாக கூறப்படுகிறது. அதன்படி சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் உள்ள திமுக தலைவர் மு க ஸ்டாலின் உலகநாயகன் கமல்ஹாசன் நேரில் சந்தித்து உள்ளதாக கூறப்படுகிறது

From around the web