கீழிறக்கி விடும் நண்பனை விட, எதிரியே மேலானவர்: பொல்லார்டின் சர்ச்சை இன்ஸ்டா பதிவு

 

தன்னை நயவஞ்சகமாக கீழே இறக்கிவிடும் நண்பனை விட, உன்னை வெறுக்கிறேன் என நேரடியாக கூறும் எதிரி மேலானவர் என மும்பை அணியின் பொல்லார்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் மும்பை அணி வேண்டுமென்றே தோல்வி அடைந்தது போல் தெரிந்தது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தான் மறைமுகமாக பொல்லார்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’நயவஞ்சமாக கீழே இறக்கிவிடும் நண்பனை விட, வெறுக்கிறேன் என நேரடியாக கூறும் எதிரி மேலானவர் என்று வார்த்தைகளுடன் கூடிய ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் 

ஐதராபாத் மற்றும் மும்பை அணிகள் இடையிலான போட்டி நடந்த மறுநாளே அவர் இந்த பதிவை பதிவு செய்திருப்பதால் அந்த போட்டி குறித்து தான் இந்த பதிவை பொல்லார்டு பதிவு செய்துள்ளார் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் 

ரோகித் சர்மாவை மறைமுகமாகக் குறிப்பிட்டு தான் பொல்லார்டு பதிவு செய்துள்ளார் என்றும் ஐதராபாத் அணிக்கு சாதகமாக நடந்து கொண்டது அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது மேலும் ஐதராபாத் அணியின் ஹோல்டர் தான் மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் என்பதும் தனக்கு மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் பதவி கொடுக்காமல் ஹோல்டருக்கு கொடுக்கப்பட்டதில் பொல்லார்டு அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது 

அதேபோல் முழுமையான உடல் தகுதி பெறாத மும்பையில் ரோஹித் சர்மாவை வேண்டுமென்றே அணிக்கு திரும்ப வரவழைத்து தன்னிடம் இருந்த கேப்டன் பொறுப்பை அவரிடம் கொடுத்ததற்காகவும் முழுமையான  கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது

From around the web