மாஸ்க் அணிந்தால் மட்டுமே கதவு திறக்கும்: புதிய தொழில்நுட்பம் அறிமுகம் 

 

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் சுமார் 200 நாடுகளில் பரவி 3 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் உலக சுகாதார மையம் முதல் உள்ளூர் சுகாதார அமைச்சகம் வரை இன்னும் சில ஆண்டுகளுக்கு பொதுமக்கள் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டியது கட்டாயம் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது 

இருப்பினும் ஒரு சிலர் மாஸ்க் அணியாமல் கொரோனா நோயைப் பரப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தாய்லாந்தில் மாஸ்க் அணிந்து வருபவர்கள் மட்டுமே கடைக்குள் நுழைய முடியும் என்ற தொழில் நுட்பத்தில் கதவுகள் அமைக்கப்பட்டுள்ளது

தாய்லாந்தில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் சென்சார் மூலம் இயங்கும் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. அந்த கதவுகளுக்கு வெளியே ஒரு ஸ்கேன் எந்திரம் வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஸ்கேனர் இயந்திரம் வாடிக்கையாளர் முகத்தை ஸ்கேன் செய்யும்போது வாடிக்கையாளரின் முகத்தில் பாஸ்க் இருந்தால் மட்டுமே கதவு திறக்கும் என்றும் கூறப்படுகிறது 

அதுமட்டுமின்றி இந்த ஸ்கேனர் வாடிக்கையாளரின் உடல் வெப்பநிலையை பரிசோதிக்கும் என்றும், மாஸ்க் அணிந்து இருத்தல் மற்றும் உடல் வெப்பநிலை சரியான அளவில் இருந்தால் மட்டுமே கதவு திறக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது 

இந்த புதிய தொழில் நுட்பம் தாய்லாந்தில் உள்ள அனைத்து கடைகளிலும் வைக்க வேண்டுமென்ற என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது. வெகு விரைவில் இது இந்தியாவுக்கும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

From around the web