தலைவிரித்தாடும் கொரோனா ஒரே நாளில் 50 ஆயிரத்தை தாண்டியது!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 53 ஆயிரத்து 476 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது!
 

 தற்போது மக்கள் மத்தியில் ஆட்கொல்லி நோய் என்று கேட்டால் முதலில் நினைவில் வருவது  கொரோனா தான்.  உலக நாடுகள் பலவற்றுக்கும் மேலும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா மிகவும் ஆதிக்கம் செலுத்தப்பட்டது. இதை தொடர்ந்து இந்தியாவில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா பரவ தொடங்கியது. இதனால் இந்திய அரசானது கடந்த ஆண்டு தொடக்கத்திலேயே நாடு முழுவதும் முழு ஊரடங்கு திட்டத்தினை அமல்படுத்தியது.

corona

இந்நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா தாக்கமானது அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். மேலும் தமிழக அரசு மாநிலங்களுக்கு இடையேயான இ பாஸ் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தியுள்ளது. மேலும் மகாராஷ்டிர மாநிலத்தில் நாக்பூர் பகுதியில் ஒரு வார காலத்திற்கு முழு ஊரடங்கு திட்டத்தினை அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் குறைந்தது 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா  கண்டறியப்பட்டதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்தது. அதன்படி இந்தியாவில் ஒரே நாளில் 53 ஆயிரத்து  476 பேருக்கு கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரே நாளில் 251 பேரை கொரோனா  உயிரிழக்க செய்துள்ளதாகவும் மத்திய சுகாதார துறை தகவல் வெளியிட்டுள்ளது. இதனால் மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.மேலும் தமிழகத்தில் தேர்தலானது ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளதால் தற்போது கொரோனா  அதிகரித்துள்ளது. . இதனால் மக்களுக்கு கொரோனா மிகுந்த வேதனையை அளிக்கிறது.

From around the web