வங்கக் கடலில் இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தாழ்வு மண்டலமானது!

மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆனது காற்றழுத்த தாழ்வு மண்டலமானது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது!!
 
bay of bengal

தற்போது தமிழகத்தின் பல பகுதிகளில் கோடை மழை கொட்டித் தீர்த்தது. மேலும் புயல் காரணமாகவும் கனமழை பெய்தது. குறிப்பாக புயல் காரணத்தால் நீலகிரி தேனி கன்னியாகுமரி போன்ற பகுதிகளில் கனமழை மிகவும் அதிகமாக இருந்தது. மேலும் நீலகிரியில் கன மழை காரணமாக அங்குள்ள பகுதிகளில் சாலைகளில் மழைநீர் அழகிய ஆறு போல ஓடியது. மேலும் கன்னியாகுமரியில் இந்த புயலின் காரணமாக வீட்டு மேற்கூரை விழுந்து சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.rain

இந்த நிலையில் இந்தக் புயலானது அரபிக் கடலில் உருவானது, ஆனால் தற்போது வங்கக்கடலில் புயல் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆனது தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை புயலாக வலுப்பெறும் என்றும் அடுத்த  24 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெறும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேலும் இவை மே 26-ஆம் தேதி ஒடிசா, வங்கதேசம் இடையே புயல் கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால் இந்திய வானிலை ஆய்வு மையம் இத்தகைய தகவலை அளித்துள்ளதால் தமிழகத்தின் கிழக்குக் கரையோரப் பகுதியில் உள்ள பல மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்க்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதுவும் குறிப்பாக தூத்துக்குடி நாகப்பட்டினம் கடலூர் போன்ற மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web