“எனக்கு இந்துதான் உணவு டெலிவரி செய்ய வேண்டும்” என்று கூறிய வாடிக்கையாளர்…!

வட இந்தியாவை சேர்ந்த அமித் சுக்லா என்பவர் தனது செல்போனில் உள்ள சோமாட்டோ ஆப் மூலம் உணவு ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். அவர் ஆர்டர் செய்த உணவை கடையில் இருந்து எடுத்து அவர் இருக்கும் இடத்திற்கு வந்து டெலிவரி செய்ய ஒரு நபரை அந்நிறுவனம் நியமித்து அந்த தகவலை அமித் சுக்லாவிற்கு அனுப்பியது. டெலிவரி செய்ய நியமிக்கப்பட்ட நபர் இந்து மதத்தை சாராதவர் என்பதை அவரது பெயரின் மூலம் தெரிந்து கொண்ட அமித் தனக்கு உணவு கொண்டு வருபவர் இந்து
 

வட இந்தியாவை சேர்ந்த அமித் சுக்லா என்பவர் தனது செல்போனில் உள்ள சோமாட்டோ ஆப் மூலம் உணவு ஒன்றை ஆர்டர் செய்துள்ளார்.

அவர் ஆர்டர் செய்த உணவை கடையில் இருந்து எடுத்து அவர் இருக்கும் இடத்திற்கு வந்து டெலிவரி செய்ய ஒரு நபரை அந்நிறுவனம் நியமித்து அந்த தகவலை அமித் சுக்லாவிற்கு அனுப்பியது. 

“எனக்கு இந்துதான் உணவு டெலிவரி செய்ய வேண்டும்” என்று கூறிய வாடிக்கையாளர்…!

டெலிவரி செய்ய நியமிக்கப்பட்ட நபர் இந்து மதத்தை சாராதவர் என்பதை அவரது பெயரின் மூலம் தெரிந்து கொண்ட அமித் தனக்கு உணவு கொண்டு வருபவர் இந்து இல்லை என்பதால் அவரை மாற்றி ஒரு இந்துவிற்கு இந்த ஆர்டரை கொண்டு வர நியமிக்க வேண்டும் என அவர் சோமாட்டோ நிறுவனத்திற்கு கோரிக்கை விடுத்தார். ஆனால் அந்நிறுவனம் இதை ஏற்க மறுத்துவிட்டது. 

இதனால் அந்த ஆர்டரை கேன்சல் செய்து அதற்காக தான் செலுத்திய கட்டணத்தையும் திரும்ப பெறாமல் இருந்துவிட்டார். அதை அவர் தனது டுவிட்டரில் பதிவாக வெளியிட்டிருந்தார். அதற்கு பதிலளித்த சோமாட்டோ நிறுவனம், “உணவில் மதம் இல்லை. உணவே ஒரு மதம் தான்” என பதிலளித்தனர். 

From around the web