செப்டம்பர் மாதத்திற்குள் கோவாக்ஸின் தடுப்பூசி 10 மடங்கு அதிகரிக்கும்!

வரும் செப்டம்பர் மாதத்திற்குள் கோவாக்ஸின்  தடுப்பூசி உற்பத்தியானது 10 மடங்கு அதிகரிக்கப்படும் என்று கூறுகிறார் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்!
 
செப்டம்பர் மாதத்திற்குள் கோவாக்ஸின் தடுப்பூசி 10 மடங்கு அதிகரிக்கும்!

தற்போது மக்கள் மத்தியில் மிகப்பெரிய கொடுமையான நோயாக கொரோனா காணப்படுகிறது. உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் தற்போது கண்டறியப்பட்டு கொரோனா சிகிச்சை அளிக்கப்படுகின்றன. இப்பேர்ப்பட்ட இந்த கொரோனா நோயானது முதன்முதலில் சீன நாட்டில் கண்டறியப்பட்டது. உலகில் உள்ள பல நாடுகளும் பல்வேறு திட்டங்களையும் பல்வேறு விதிமுறைகளும் கொண்டு கொரோனா நோய்க்கு எதிராக போராடுகின்றனர். மேலும் உலகில் ஒவ்வொரு நாடுகளும் புதிது புதிதாக தடுப்பூசிகளையும் கண்டறிந்து வருகின்றனர். 

covaxin

இந்தியாவின் சார்பில் இரண்டு தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு அவை இந்தியாவில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் அனுப்பப்படுகின்றன. மேலும் பல நாடுகளுக்கும் இந்தியாவின் சார்பில் ஏற்றுமதி செய்ய படுகின்றன. குறிப்பாக இத்தாலி பிரான்ஸ் போன்ற நாடுகளில் இந்தியாவின் தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. மேலும் இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த தடுப்பூசி கோவாக்ஸின் மற்றும் கோவிட்ஷீல்ட். இந்நிலையில் மத்திய அரசின் சார்பில் பல மாநிலங்களில் உள்ள அரசு மருத்துமனைக்கு கொரோனா தடுப்பூசிகள் அனுப்பப்பட்டன.

இந்நிலையில் 45 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி குறித்து மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறியுள்ளார். அதன்படி வரும் செப்டம்பர் மாதத்திற்குள் கோவாக்ஸின் தடுப்பூசி உற்பத்தி 10 மடங்கு அதிகரிக்கப்படும் என்றும் அவர் கூறினார். மேலும் சிறிய மாநிலங்களுக்கு 7 நாட்களுக்கு ஒரு முறையும் பெரிய மாநிலங்களுக்கு நான்கு நாட்களுக்கு ஒரு முறையும் தடுப்பூசிகள் விநியோகம் செய்யப்படும் என்றும் அவர் கூறினார். மேலும் மத்திய அரசின் கீழ் செயல்படும் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கான படுக்கை வசதிகள் அதிகரிக்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறியுள்ளார்.

From around the web