மக்கள் கட்டுப்பாடுடன் இருந்தால் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வரும்!

புதுச்சேரியில் மக்கள் கட்டுப்பாடுகளுடன் செயல்பட்டால் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வரும் என்று கூறும் புதுச்சேரி  ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன்!
 
மக்கள் கட்டுப்பாடுடன் இருந்தால் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வரும்!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல்  அறிவித்துள்ள ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்காளர்கள் அனைவரும் வரிசையில் நின்று தங்களது வாக்கினை பதிவு செய்து ஜனநாயக கடமை ஆற்றினார். சட்டமன்றத் தேர்தல் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளா மற்றும் புதுச்சேரியிலும் நடைபெற்றது.

mask

புதுச்சேரியில் மொத்தம் 30 தொகுதிகள் உள்ளன. இந்த 30 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மேலும் வாக்காளர்கள் அனைவரும் வரிசையில் வந்து ஜனநாயக கடமையாற்றினார். புதுச்சேரியில் தேர்தலை ஒட்டி 144 தடை போடப்பட்டிருந்தது. மேலும் புதுச்சேரியில் 72 மணி நேரத்திற்கு மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. சில தினங்களாக புதுச்சேரியில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் சில தினங்கள் முன்பு புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சில வேறு விதிகளை அறிவித்திருந்தார்.

அதன்படி பொது இடங்களில் மாஸ்க் கட்டாயமும் அவர் கூறியுள்ளார். தற்போது அவர் கூறியுள்ளார் புதுச்சேரியில் மக்கள் கட்டுப்பாட்டுடன் செயல்பட்டால் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வரும் எனவும் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். மேலும் புதுச்சேரியில் மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம் வழங்கப்பட்டு மேலும் அபராதத்துடன் மாஸ்க் கொடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

From around the web