கோழிக்கோடு விமான விபத்தில் மீட்கப்பட்ட குழந்தை: யார் என கண்டுபிடிக்க முயற்சி

துபாயில் இருந்து கோழிக்கோடு வந்த விமானம் ஒன்று 191 பயணிகளுடன் தரையிறங்கிய போது திடீரென விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானம் இரண்டாக உடைந்தது என்றும் சம்பவ இடத்திலேயே பைலட் பலியானார் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் துணை பைலட் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இந்த விபத்தில் காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மீட்பு படையினர் சற்று முன் ஒரு குழந்தையை மீட்டனர். அந்த குழந்தையின் புகைப்படம்
 

கோழிக்கோடு விமான விபத்தில் மீட்கப்பட்ட குழந்தை: யார் என கண்டுபிடிக்க முயற்சி

துபாயில் இருந்து கோழிக்கோடு வந்த விமானம் ஒன்று 191 பயணிகளுடன் தரையிறங்கிய போது திடீரென விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானம் இரண்டாக உடைந்தது என்றும் சம்பவ இடத்திலேயே பைலட் பலியானார் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் துணை பைலட் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

இந்த விபத்தில் காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மீட்பு படையினர் சற்று முன் ஒரு குழந்தையை மீட்டனர். அந்த குழந்தையின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது

இந்தக் குழந்தை யார் என்பதை கண்டுபிடிக்க நெட்டிசன்கள் உதவி வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தை பிகில் திரைப்படத்தில் நடித்த ரெபா மோனிகா தனது டுவிட்டரில் பதிவு செய்து இந்த குழந்தையை கண்டுபிடிக்க தயவு செய்து யாராவது உதவி செய்யுங்கள் என்றும் அந்த குழந்தை தற்போது காயத்துடன் இருப்பதால் அவர் விரைவில் குணமாக இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார்

இந்த குழந்தை விரைவில் அவரது பெற்றோர்களுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

From around the web