எந்த காலத்திலும் ஸ்டாலின் முதல்வராக முடியாது என்று கூறும் முதல்வர்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்!
 

சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6ம் தேதியில் நடைபெற உள்ளது. தமிழகத்தில் மட்டுமின்றி புதுச்சேரியிலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் தமிழகத்தில் 234 தொகுதிகள் உள்ளன. இந்த 234 தொகுதியிலும் பல கட்சிகள் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க உள்ளன. இந்நிலையில் ஆளும் கட்சியாக உள்ள அதிமுக கட்சி கூட்டணி ஆக பாஜக , பாட்டாளி மக்கள் கட்சியையும் வைத்துள்ளது.

மேலும் எதிர்க்கட்சியாக உள்ள திமுக கட்சியானது தன்னுடன் கூட்டணியாக தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சியும், தேசிய கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியையும் ஆட்சியையும் வைத்துள்ளது. கூட்டணிக் கட்சிகள் தமது வேட்பாளர்களை வெளியிட்டு அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டனர். இந்நிலையில் மேலும் தேர்தல் அறிக்கையை பல்வேறு கட்சிகள் வெளியிட்டது

admk

.தற்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்திலுள்ள பல பகுதிகளில் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். மேலும் திமுக சார்பில் திமுக கட்சி தலைவர் மு க ஸ்டாலின் தமிழகத்தின் எல்லா பகுதிக்கும் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். தற்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அவர் தற்போது  ரிஷிவந்தியம் தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நிலையில் ,ரிஷிவந்தியம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்துபிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மேலும் பரப்புரையில் எந்த காலத்திலும் ஸ்டாலின் முதல்வராக முடியாது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். நல்ல எண்ணம் வேண்டும், நல்ல எண்ணம் இருந்தால் தான் உயர முடியும் என முதல்வர் பழனிசாமி கூறுகிறார்.

From around the web