"நாளை மறுநாள் அதாவது இரு நாள்களில் முதல்வர் அறிவிப்பார்"

அனைத்து தரப்பு கருத்துக்களையும் கேட்டு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இறுதி முடிவு எடுப்பார் என்று கூறியுள்ளார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்!
 
anbil mahesh poiyamozhi

தமிழகத்தில் திமுக ஆட்சி நடைபெறுகிறது. அதன்படி தற்போது தமிழகத்தின் முதல்வராக உள்ளார் திமுக தலைவர் மு க ஸ்டாலின், மேலும் அவர் முன்னாள் முதலமைச்சர் மு கருணாநிதியின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது. முதலமைச்சராக உள்ளபோது தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி இருக்கிறார். மேலும் இன்றைய தினம் அவரின் தந்தையும் முன்னாள் முதல்வருமான மு கருணாநிதியின் பிறந்தநாள் என்பதால் தமிழக மக்களுக்கு 2000 ரூபாய் இந்த மாதம் வழங்கப்படும் என்றும் அவற்றை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என்றும் கூறப்பட்டது.stalin

இந்நிலையில் பல பகுதிகளில் தற்போது 2000 ரூபாய் கொடுத்து வருகின்றனர். மகேஷ் பொய்யாமொழி அவரிடம் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு பற்றி தினந்தோறும் கேட்கப்படுகிறது. இந்த சூழலில் அவர் இன்றைய தினம் நிவாரண பொருட்களை வழங்கிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்து சில அறிவிப்புகளை கூறினார். அந்த படி தமிழகத்தில் ஆசிரியர்கள் பெற்றோர் ஆகியோருடன் கருத்துக்கள் கேட்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். மேலும் அனைத்து தரப்புகளின் கருத்துக்களையும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கேட்டு இறுதி முடிவை எடுப்பார் என்றும் அவர் கூறினார்.

மேலும் அவர் பெற்றோர் சங்கம், ஆசிரியர் சங்கம், மருத்துவ நிபுணர் குழுவின் மூலம் வீடியோ கான்பிரன்ஸ் நடத்தி அதில் கருத்துக்கள் கேட்கப்பட்டு இறுதி முடிவினை நாளை மறுநாள் அதாவது இரண்டு நாள் பின்னர் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறுவார் என்றும் கூறினார். மேலும் தமிழகத்தில் டெட் தேர்வு எழுதி காத்திருப்பவர்களுக்கு பணிநியமனம் குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

From around the web