தன்னைத் தானே நான் ஒரு தெரு சண்டைக்காரி என்றும் கூறும் மேற்குவங்க முதல்வர்!

மேற்குவங்க சட்டபேரவை  பரப்புரைக் கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆவேசம் கூற்று!
 

சட்டமன்றத் தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஆளும் கட்சியான அதிமுக கட்சி தன்னுடன் கூட்டணியாக பாஜக கட்சி பாமக  கட்சி வைத்துள்ளது. எதிர்கட்சியான திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியும் வைத்துள்ளது.மேலும் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் பல்வேறு கட்சிகள் பல்வேறு கூட்டணியுடன் கலந்துள்ளன. கூட்டணிஇன்றி கட்சி வேட்பாளர்களை அறிவித்து நாம் தமிழர் கட்சி. அதில் 117 ஆண் வேட்பாளர்களும் 117 பெண் வேட்பாளர்களும் உள்ளனர்.

mamata

இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் மட்டுமின்றி புதுச்சேரியிலும், கேரளாவிலும் நடைபெற உள்ளது .மேலும் சட்டமன்ற தேர்தல் மேற்குவங்கத்தில் நடைபெற உள்ளது.மேற்குவங்கத்தில் ஆட்சியில் உள்ளது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பாக அக்கட்சியின் மூத்த உறுப்பினரான மம்தா பேனர்ஜி முதலமைச்சர் வேட்பாளராக இருந்து 2 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று பத்தாண்டுகளாக மேற்குவங்கத்தில் முதல்வராக உள்ளார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அவர் தேர்தல் பரப்புரை மேற்கொள்ளும் போது அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டார். இந்நிலையில் அவர் தேர்தல் பரப்புரையில் மிகவும் ஆவேசமாக கூறினார். அப்போது அவர் தன்னைத் தானே நான் ஒரு தெரு சண்டைக்காரி  எனவும் கூறினார். ஏற்கனவே என் மீது எதிரிகள் நடத்திய தாக்குதலில் தலையில் காயம் அடைந்ததாகவும் கூறினார். மேலும் சில தினங்களுக்கு முன்பு எனது காலில் காயமுற்ற  நான் ஆனாலும் நான் ஒரு தெரு சண்டைக்காரி  என்று ஆவேசமாக கூறினார்.

From around the web