ஹெச்.ராஜா மீதான குற்றச்சாட்டு விசாரிக்கப்படும்!- பாஜக மாநில தலைவர்!

ஹெச் ராஜா மீதான குற்றசாட்டு கண்டிப்பாக விசாரிக்கப்படும் என்று தமிழக பாஜக தலைவர் முருகன் கூறியுள்ளார்
 
murugan

தற்போது நம் தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ளது திமுக. மேலும் தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுடன் தேர்தலை சந்தித்த கூட்டணி கட்சிகளை முக்கியமான கூட்டணி என்று அனைவராலும் பேசப்பட்டது அதிமுக-பாஜக இடையே கூட்டணி. அதன்படி அதிமுக கூட்டணியில் பாஜக தனது 20 தொகுதிகளில் போட்டியிட்டது. 20 தொகுதிகளில் பாஜக 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் 20 ஆண்டுக்கு பின்னர் தமிழக சட்டப்பேரவையில் பாஜக 4 எம்எல்ஏக்கள் நுழைந்துள்ளனர் என்றும் கூறலாம்.murugan

 தமிழகத்தில் பாஜக தலைவராக உள்ளார் முருகன். மேலும் அவர் சட்டமன்ற தேர்தலில் தாராபுரம் தொகுதியில் போட்டியிட்டு கடைசி நேரத்தில் தோல்வியைத் தழுவினார். இந்நிலையில் அவர் தினம்தோறும் ஆளும் கட்சியை விமர்சித்து வருகிறார். மேலும்  தற்போது கட்சி நிர்வாகி ஒருவர் மீது கண்டிப்பாக விசாரிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். எச் ராஜா மீது பாஜக நிர்வாகிகள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். அதனை அந்த குற்றச்சாட்டினை கண்டிப்பாக விசாரணை செய்யப்படும் என்றும் பாஜக மாநில தலைவர் முருகன் கூறியுள்ளார்.

மேலும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைப்பது பற்றி தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என்றும் பாஜக மாநில தலைவர் முருகன் கூறியுள்ளார்.

From around the web