வாக்கு இயந்திரங்கள் உள்ள அறையில் சிசிடிவி கேமரா இயங்கவில்லை!

திருவள்ளூரில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்டிராங் ரூமில் சிசிடிவி கேமரா இயங்காததால் அதிர்ச்சி!
 
வாக்கு இயந்திரங்கள் உள்ள அறையில் சிசிடிவி கேமரா இயங்கவில்லை!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஆனது ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. மேலும் இந்த சட்டமன்ற தேர்தலில் வாக்காளர் அனைவரும் வரிசையில் நின்று தங்களது வாக்கினை பதிவு செய்தனர். மேலும் அவர்களுக்கு பாதுகாக்கும் வண்ணமாக முகக்கவசம் கையுறை போன்றவைகள் கொடுக்கப்பட்டன.  மேலும் அவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றியும் வாக்களித்தனர். இந்நிலையில் தமிழகத்தில் வாக்கு பதிவானது காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை 12 மணி நேரங்களாக நடைபெற்றது. அதன் பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு தற்போது பல்வேறு மையங்களில் பாதுகாப்பான சூழ்நிலையில் கண்காணிப்புகள் மத்தியில் கவனமாக பாதுகாக்கப்படுகிறது.

dmk

 ஒரு சில தினங்களாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட மையங்களில் சில அசம்பாவிதங்கள் நடைபெறுகின்றன. அதன்படி நேற்றையதினம் திருச்சி தனியார் கல்லூரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்ட வளாகத்திற்குள் லாரி ஒன்று நுழைந்தது. மேலும் அதனை தடுத்து  அதிகாரிகள் விசாரித்தனர். இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஆனால் தற்போதுஇச்சம்பவமானது சிசிடிவி கேமரா இயங்க பட்டதாக கூறப்படுகிறது.இச்சம்பவம் திருவள்ளூர் மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது.

அதன்படி திருவள்ளூரில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்டிராங் ரூமில் சிசிடிவி கேமரா இயங்காததால் அதிர்ச்சி நிலவியது. அந்த ரூமில்  3 மணியிலிருந்து ஒரு மணி நேரத்துக்கு இயங்காததாக கூறப்படுகிறது. இதனால் திமுகவினர் பேரதிர்ச்சியில்புகார் அளித்தனர். மேலும் திருவள்ளூர் ஸ்ரீ ராம் தொழில்நுட்ப கல்லூரியில் அம்பத்தூர் மாதவரம் திருவொற்றியூர் தொகுதி வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் திமுகவினர் உடனடியாக புகார் அளித்தனர். திமுகவினரின் புகாரை தொடர்ந்து ஒரு மணி நேரத்துக்குப் பின் சிசிடிவி கேமரா பழுது பார்த்து சரி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

From around the web