தேசிய மக்கள் கட்சியின் வழக்கு முடிக்கப்பட்டது!

தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்ய அனுமதி கோரிய தேசிய மக்கள் கட்சியின் வழக்கு முடித்து வைக்கப்பட்டது!
 

தமிழக சட்டமன்ற தேர்தலில் நெருங்கிய நிலையில் பல கட்சிகள் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி யில் உள்ளது. இது ஆளும் கட்சி அதிமுக கட்சி தன்னுடன் கூட்டணியாக பாஜக கட்சி  கூட்டணி வைத்துள்ளது மேலும் எதிர்க் கட்சியான திமுக கட்சி தன்னுடன் கூட்டணியாக காங்கிரஸ் கட்சியை வைத்துள்ளது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் தேர்தலுக்காக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.

election

 தேர்தல் பறக்கும் படையினர் ஆங்காங்கே கொண்டுசெல்லப்படும் உரிய ஆவணங்கள்இன்றி உள்ள நகைகளையும், பணத்தையும் பறிமுதல் செய்தும் வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையம் ஆனது தற்போது ஐகோர்ட்டில் பதில் ஒன்றை அனுப்பியுள்ளது. என்னவெனில் அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

மேலும் பதிவு செய்யப்படாத, அங்கீகரிக்கப்படாத கட்சிகள் மாநிலம் முழுவதும் பரப்புரை செய்ய அனுமதிக்க முடியாது எனவும் கூறியுள்ளது. தொகுதி வாரியாக மட்டுமே விண்ணப்பித்து அனுமதி பெறலாம் எனவும் தேர்தல் ஆணையம்  பதிலளித்துள்ளது. இதனை தேசிய மக்கள் கட்சியினர் வழக்கு தொடுத்தனர் .அவர்கள் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்ய அனுமதி கோரி வழக்கு தற்போது வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

From around the web