இனி மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு போடக்கூடாது!!!-எதிர்த்து வழக்கு;

மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு போடுவதை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது
 
mookanakairu

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர் என்று தமிழகத்தில் முன்னொரு காலத்தில் இருந்தது. இந்த உழவுத் தொழிலில் பலரும் முன்னொரு காலத்தில் மிகவும் ஆர்வமுடன் இருந்தனர். ஆனால் காலங்கள் செல்ல செல்ல உழவுத் தொழிலானது குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் முன்னொரு காலத்தில் உழவு தொழில் என்றால் அவற்றுக்கு மாடுகளே அதிகமாக பயன்படுத்தப்பட்டு, நவீன கால வளர்ச்சியின் போது டிராக்டர்கள் புதிய இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.mookanakairu

மேலும் இந்த மாடுகள் உழவு தொழில் மட்டுமின்றி பல்வேறு வற்றிற்கு மிகவும் பயன்பட்டு காணப்படுவது ஏன் என்றால் மாடுகள் முன்னொரு காலத்தில் வண்டி இழுப்பதற்கும் பயன்படுத்தப்பட்டது. மேலும் தற்போது பலரின் வீடுகளில் பசு மாடுகள் வளர்க்கப்பட்டு பால் விநியோகமும் அதிகமாக காணப்படுகிறது. இத்தகைய நலன்களை கொடுக்கின்ற மாடுகளுக்கு மனிதர்கள் அவ்வப்போது துன்பத்தினை கொடுக்கின்றன என்பது தவிர்க்க முடியாத உண்மையாக காணப்படுகிறது.

இந்நிலையில் மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு போடுவதை எதிர்த்து தற்போது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அந்த மூக்கணாங்கயிறு போடுவதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. ஒன்றிய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மூக்கில் துளையிட்டு மூக்கணாங்கயிறு போடுவதால் மாடுகள் துன்புறுகின்றனர் என்று மனுதாரர் தரப்பில் இருந்து கூறப்படுகிறது. மேலும் உலகளவில் மாடுகளை கட்டுப்படுத்த இந்த நடைமுறையில் தான் பின்பற்றப்படுகிறது என்று தலைமை நீதிபதி அமர்வு கூறியுள்ளது

From around the web