பாய்பிரண்டுடன் சேட் செய்த 16 வயது தங்கையை துப்பாக்கியால் சுட்ட அண்ணன்!

 

16 வயது தங்கை தனது ஆண் நண்பருடன் இன்டர்நெட்டில் சாட் செய்து கொண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது 17 வயது அண்ணன், தங்கை என்றும் பாராமல் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

டெல்லியில் உள்ள ஒரு குடும்பத்தில் 17 வயது இளைஞர் மற்றும் அவரது தங்கை 16 வயது தங்கை பெற்றோருடன் வசித்து வருகின்றனர். 16 வயது சிறுமி பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வீட்டிலேயே இருந்துள்ளார்

இந்த நிலையில் திறந்தவெளி பள்ளிப்படிப்பில் படித்துக்கொண்டே சலூன் கடையில் வேலை செய்து கொண்டிருந்த அண்ணன் ஒரு நாள் தற்செயலாக தனது தங்கை பாய்பிரண்டுடன் செல் போனில் பேசியபடியும் வாட்ஸ் அப்பில் சேட் செய்தபடியும் இருந்ததாக தெரிகிறது. தங்கையின் நடவடிக்கைகளை கவனித்து அண்ணன் பலமுறை அவரை கண்டித்துள்ளார். பாய்பிரண்டுடன் பேசக்கூடாது என்றும் சேட் செய்யக்கூடாது என்றும் அவர் கண்டித்துள்ளார் 

gunshot

ஆனால் அண்ணனின் அறிவுரையை கேட்காத அந்த சிறுமி மீண்டும் மீண்டும் தனது பாய் பிரண்டுடன் சாட் செய்து கொண்டிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் திடீரென துப்பாக்கியை எடுத்து தங்கையை சரமாரியாக சுட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மருத்துவர்கள் அந்த சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளித்ததாகவும் அவர் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக கூறப்படுகிறது 

இந்த நிலையில் சிறுமியை கொலை செய்ய முயன்ற குற்றத்திற்காக அந்த இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். பாய்பிரண்டுடன் சாட் செய்த தங்கையை அண்ணனே துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

From around the web