மீனவர் வலையில் சிக்கிய 11 வயது சிறுவனின் உடல்: குமரி அருகே பரபரப்பு 

 

பொதுவாக மீனவர்கள் வீசும் வலையில் ஆயிரக்கணக்கான மீன்கள் தான் சிக்க்கும், ஆனால் மீனவர்கள் வீசிய வலை ஒன்றில் 11 வயது சிறுவனின் உடல் சிக்கியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு புதூர் என்ற பகுதியைச் சேர்ந்த சகாய ராபின் என்பவரின் பத்து வயது மகன் ரோகித். இந்த சிறுவன் ஐந்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில் அந்த சிறுவன் எதிர்பாராதவிதமாக கடலில் விளையாடிக் கொண்டிருக்கும்போது கடல் அலை இழுத்து சென்றது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவருடைய நண்பர்கள் ஊர் மக்களிடம் தெரிவித்தனர். உடனடியாக கடலோர காவல்படை மற்றும் போலீசார் விரைந்து சென்று ரோகித்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்ட ரோஹித்தை கண்டுபிடிக்க முடியவில்லை

இந்த நிலையில் நேற்று அந்த பகுதியில் மீனவர்கள் வழக்கம்போல் மீன்பிடிக்கச் சென்றபோது மீனவர்கள் வீசிய வலை ஒன்றில் சிறுவனின் சடலம் சிக்கியது. உடனே மீனவர்கள் அந்த சிறுவனின் சடலத்தை கரைக்கு கொண்டு வந்தனர். பெற்றோர்கள் அது தங்கள் மகன் தான் என்பதை அடையாளம் செய்ததை அடுத்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

From around the web