"நீட் எழுதிய மாணவர்களுக்கு" உளவியல் ஆலோசனை வழங்குமுறை துவக்கம்!!

நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனைகளை வழங்கும் நடைமுறையை அமைச்சர் மா சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்
 
neet

தற்போது நம் தமிழகத்தில் தொடர்ச்சியாக மாணவர்கள் மத்தியில் தற்கொலை அதிகமாக காணப்படுகிறது. மேலும் அதுவும் குறிப்பாக நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் மத்தியில் தொடர்ந்து தற்கொலைகள் காணப்படுகிறது. இவை இன்று மட்டுமில்லாமல் கடந்த சில வருடங்களாகவே வரிசையாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இந்த ஆண்டு நீட் தேர்வினால் சில மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.neet

இதற்கு சட்டப்பேரவையில் ஆளும் கட்சி-எதிர்க்கட்சி இடையே விவாதம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக தற்போது நீட் மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கப்பட உள்ள திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கும் நடைமுறையை அமைச்சர் மா சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.

மேலும் 104 இலவச மருத்துவ சேவை மையத்திலிருந்து உளவியல், மனநல ஆலோசகர்கள் 24 மணிநேரமும் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க உள்ளதாகவும் அறிவித்துள்ளார். மேலும் தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுதிய 1.12 லட்சம் பேரின் செல்போன் எண்கள் தேசிய தேர்வு முகாமிடம் இருந்து பெறப்பட்டுள்ளது என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். அனைவரிடமும் முதலில் இரண்டு நிமிடம் பேச ஒப்புதல் கேட்கப்பட்டு அதிகபட்சம் 20 நாட்களுக்குள் அனைவரிடம் பேச திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

From around the web