மண்ணுக்குள் புதைக்கப்பட்டு இருந்த பச்சிளம் குழந்தை… உயிருடன் மீட்பு!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் சனவுரா என்ற கிராமத்தில் மண்ணுக்குள் புதைக்கப்பட்டு இருந்த குழந்தையினைக் கண்டெடுத்துள்ள சம்பவம் நடந்துள்ளது. அதாவது அங்குள்ள சித்தார்த்நகர் பகுதியில் 5 நாட்களுக்கு முன்னதாக (திங்கள்கிழமை), வீடு கட்டும் பணி நடைபெற்றது. அப்போது ஒரு குறிப்பிட்ட இடத்திற்குப் பக்கத்தில் வேலை செய்து கொண்ட பணியாட்கள் பச்சிளம் குழந்தை ஒன்றின் சத்தம் கேட்க அங்குள்ள இடங்களில் தேடினர். அப்போது அங்கிருந்த மண்ணிற்கு அடியில் பச்சிளம் குழந்தை ஒன்று புதைக்கப்பட்டு இருந்தது. அதனை லேசாகத் தோண்டிப் பார்த்தனர், தோண்டிய
 
மண்ணுக்குள் புதைக்கப்பட்டு இருந்த பச்சிளம் குழந்தை… உயிருடன் மீட்பு!!

உத்திரப்பிரதேச  மாநிலத்தில் சனவுரா என்ற கிராமத்தில் மண்ணுக்குள் புதைக்கப்பட்டு இருந்த குழந்தையினைக் கண்டெடுத்துள்ள சம்பவம் நடந்துள்ளது. அதாவது அங்குள்ள சித்தார்த்நகர் பகுதியில் 5 நாட்களுக்கு முன்னதாக (திங்கள்கிழமை), வீடு கட்டும் பணி நடைபெற்றது.

அப்போது ஒரு குறிப்பிட்ட இடத்திற்குப் பக்கத்தில் வேலை செய்து கொண்ட பணியாட்கள் பச்சிளம் குழந்தை ஒன்றின் சத்தம் கேட்க அங்குள்ள இடங்களில் தேடினர். அப்போது அங்கிருந்த மண்ணிற்கு அடியில் பச்சிளம் குழந்தை ஒன்று புதைக்கப்பட்டு இருந்தது.

மண்ணுக்குள் புதைக்கப்பட்டு இருந்த பச்சிளம் குழந்தை… உயிருடன் மீட்பு!!

அதனை லேசாகத் தோண்டிப் பார்த்தனர், தோண்டிய பின்னர் உள்ளே ஒரு குழந்தை இருக்க அதைக் கண்டு ஷாக் ஆகினர். குழந்தைக்கு மூச்சு இருப்பது தெரியவர அங்குள்ள மருத்துவமனைக்கு பைக்கில் தூக்கிச் சென்றுள்ளனர்.

குழந்தையை மருத்துவர்கள் பரிசோதித்துப் பார்த்துள்ளனர். அதன்பின்னர் குழந்தையின் உயிருக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை, நலமாகவே இருக்கிறார் என்று கூறியதோடு மருத்துவமனையிலேயே தொடர்ந்து 2 நாட்கள் சிகிச்சை பெறக் கூறியுள்ளனர்.

மேலும் குழந்தையின் வாயில் மட்டும் மண் இருந்ததால், அதனை மருத்துவர்கள் அகற்றிவிட்டனர். குழந்தை புதைக்கப்பட்டு சிறிது நேரம்தான் ஆகியதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

From around the web