சாலையில் கிடந்த 1.75 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்

 

சென்னை மெரினா அருகே சாலையில் கிடந்த ரூ.1.75 லட்சம் பணத்தை எடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர் ஒருவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருவதோடு அவரை காவல்துறை ஆணையர் நேரில் அழைத்து பாராட்டும் தெரிவித்துள்ளார்

சாலையில் பத்து ரூபாய் இருந்தாலே அதை எடுத்து பாக்கெட்டில் போட்டுக் கொள்பவர்கள் மத்தியில் சென்னை மெரினா அருகே காமராஜர் சாலையில் ரூபாய் 1.75 லட்சம் பணம் கேட்பாரற்று கிடந்தது. இந்த பகுதி வழியாக சென்ற ஆட்டோ டிரைவர் சுப்பிரமணி என்பவர் அந்த பணத்தை எடுத்து உடனடியாக அருகில் இருந்த காவல் நிலையத்தில் சென்று காவல்துறையினரிடம் ஒப்படைத்தார். இதனையடுத்து அவரை பாராட்டிய காவல்துறையினர் இந்த பணம் யாருடையது என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்

இந்த நிலையில் காமராஜர் சாலையில் கேட்பாரற்றுக் அடைந்த 1.75 லட்சம் ரூபாய் பணத்தை போலீசாரிடம் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர் சுப்பிரமணியின் நேர்மையை பாராட்டி சென்னை காவல்துறை ஆணையர் அவரை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்ததோடு சான்றிதழும் வழங்கினார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

From around the web