தங்க புதையல் எடுத்துத் தருவதாக ஆசை கட்டி ஏமாந்த விவசாயி !ஏமாற்றிய ஜோதிடர்!

தங்க புதையல் எடுத்து தருவதாக கூறி விவசாயிடம் 22 லட்சம் ரொக்கம் மற்றும் 45 சவரன் நகையை ஏமாற்றிய ஜோதிடர்!
 
தங்க புதையல் எடுத்துத் தருவதாக ஆசை கட்டி ஏமாந்த விவசாயி !ஏமாற்றிய ஜோதிடர்!

தமிழகத்தில் உழைத்து வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் படிக்கும் இளைஞர்கள் பலரும் படிக்கும்போதே வேலை பார்த்துக்கொண்டு வாழ்கின்றனர். அவர்கள் மத்தியிலும் ஒரு சிலர் மக்களை ஏமாற்றுகிறது வேதனை அளிக்கிறது. மேலும் குறிப்பாக ஜோதிடர் பலரும் மக்களை மனதை வஞ்சித்து அவர்களை ஏமாற்றுவது அவ்வப்போது தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது ஜோதிடர் ஒருவர் தங்க புதையல் எடுத்துத் தருவதாக கூறி விவசாயியை ஏமாற்றியது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது.

puthaiyal

அதன்படிதிண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் தங்க புதையல் எடுத்து தருவதாக கூறி விவசாயியை ஏமாற்றி வந்தார் ஜோதிடர் சசிகுமார். மேலும் குடும்ப கஷ்டம் காரணமாக விவசாயி தங்கவேலு ஜோதிடர் சசிகுமாரை சந்தித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .முன்னதாக அவர் தங்களது தோட்டத்தில் தங்க புதையல் எடுத்து தருவதாக கூறி விவசாயிக்கு ஆசை காட்டி உள்ளார். அதன்படி அவர் ஜோதிட சசிகுமாருக்கு புல்லட் வண்டி, செல்போன், கார் வாங்கிக் கொடுத்துள்ளார் ஏமாந்த விவசாயி தங்கவேலு.

அவ்வளவு கொடுத்தும் அவர் தங்க புதையல் எடுத்து தராமல் ஏமாற்றியதாக தகவல் வெளியாகி உள்ளது.மேலும் ஜோதிடருக்கு 22 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 45 சவரன் நகைகளை கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இவ்வளவு செய்தும் ஜோதிடர் தனக்கு தராததால் அவர் ஜோதிடர் இருந்து பொருட்களை திருப்பி கேட்டஉள்ளார்.  ஆனால் ஜோதிடர் அவரை கொலை மிரட்டல் விடுத்ததால் விவசாயி தங்கவேலு காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார். அதன்படி தற்போது ஜோதிடர் சசிகுமார் காவலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் தமிழகத்தில் நடைபெறுவது மிகுந்த வேதனை அளிக்கிறது.

From around the web