தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா ரத்து

ஆண்டுதோறும் நடைப்பெறும் தஞ்சாவூர் பெரிய கோவில் சித்திரை திருவிழா கொரோனா காரணமாக நடைப்பெறாது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தஞ்சை பெரிய கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். சித்திரை திருவிழா தேரோட்டம் 100 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கி தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளாக நடந்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருவிழா கொடியேற்றம் நேற்று நடைபெறுவதாக இருந்தது. தேரோட்டம் அடுத்த மாதம்(மே) 2-ந் தேதி நடைபெறுவதாக
 

ஆண்டுதோறும் நடைப்பெறும் தஞ்சாவூர் பெரிய கோவில் சித்திரை திருவிழா கொரோனா காரணமாக நடைப்பெறாது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா ரத்து

தஞ்சை பெரிய கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். சித்திரை திருவிழா தேரோட்டம் 100 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கி தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளாக நடந்து வருகிறது.

அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருவிழா கொடியேற்றம் நேற்று நடைபெறுவதாக இருந்தது. தேரோட்டம் அடுத்த மாதம்(மே) 2-ந் தேதி நடைபெறுவதாக இருந்தது. இந்த சித்திரை திருவிழாவிற்காக குடமுழுக்கு முடிந்து 48 நாட்கள் நடைபெற இருந்த மண்டல பூஜையானது 24 நாட்களாக குறைக்கப்பட்டது.


கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் சுற்றுலா தலங்கள், கோவில்கள் மூடப்பட்டுள்ளது. அதன்படி தஞ்சை பெரியகோவிலும் கடந்த மாதம் (மார்ச்) 18-ந்தேதி முதல் மூடப்பட்டுள்ளது. கோவிலில் வழக்கம்போல் நான்கு கால பூஜைகள் மட்டும் நடந்து வருகிறது. பிரதோஷ நாட்களில்கூட பக்தர்கள் அனுமதியின்றி கோவில் குருக்கள் மட்டுமே பெரிய கோவில் மகா நந்திக்கு அபிஷேகம் செய்து வருகிறார்.


ஊரடங்கு உத்தரவு கடந்த 14-ந் தேதியுடன் நிறைவடைந்து விடும் என எண்ணியிருந்த நிலையில் அடுத்த மாதம் 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டதால் சித்திரை திருவிழா ரத்து செய்யப்படுவதாக பெரிய கோவில் முன்பு அரண்மனை தேவஸ்தானம் சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. நேற்று நடைபெற இருந்த கொடியேற்று விழாவும் நடைபெறவில்லை. சித்திரை திருவிழா ரத்தானதால் தஞ்சவாழ் மக்கள் கவலை அடைந்துள்ளனர்.

From around the web