ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ்: இனி ஆயுள் முழுவதும் செல்லும் என அறிவிப்பு!

 
tet

டெட் என்னும் ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ் இதுவரை ஏழு ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும் என்று கூறப்பட்ட நிலையில் சற்றுமுன் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அவர்கள் அறிவித்த அறிவிப்பின்படி இனி ஆயுள் முழுவதும் செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் ஆசிரியராக நியமனம் செய்யப்படுவதற்கு டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம் என்று இருந்தது. ஆனால் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் அதில் கிடைக்கும் சான்றிதழ் 7 ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும் என கடந்த 2011ஆம் ஆண்டு ஆசிரியர் கல்விக்கான தேசிய குழு அறிவித்துள்ளது. இதனால் ஒவ்வொரு ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆசிரியர்கள் இந்த தேர்வை எழுதி தங்களுடைய தகுதியை நிரூபிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 7 ஆண்டுகள் வரை சான்றிதழ்கள் செல்லும் என்ற முறை தற்போது நீக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக ஒரு முறை டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் ஆயுள் முழுவதும் அதில் கிடைக்கும் சான்றிதழ் செல்லுபடியாகும் என மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அவர்கள் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் முன்தேதியிட்டு அறிவிக்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

From around the web