சான்றிதழோ தடுப்பூசியோ எது இருந்தாலும் பரிசோதனை கட்டாயம்!

கொரோனா இல்லை சான்றிதழ் அல்லது முதல் கட்ட தடுப்பூசி போடப்பட்டுள்ளது எதுவாக இருந்தாலும் உடல் வெப்ப நிலை பரிசோதிக்கப்படும் என்று கூறியுள்ளார் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு!
 
சான்றிதழோ தடுப்பூசியோ எது இருந்தாலும் பரிசோதனை கட்டாயம்!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஆறாம் தேதி நடைபெற்று முடிந்தது. மேலும் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கையானது மே இரண்டாம் தேதி நடைபெற உள்ளது. இந்த மே இரண்டாம் தேதி வருகின்ற ஞாயிற்றுக்கிழமை என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுமா என்று குழப்பங்கள் இந்த நிலையில் தமிழகத்தில் மே இரண்டாம் தேதி தேதி அறிவித்த படி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியிருந்தார்.saagu

மேலும் அவர் வாக்கு எண்ணிக்கை குறித்த தகவல்களையும் வெளியிட்டு இருந்தார். கட்டுப்பாட்டுடனும் பாதுகாப்புடனும் நடைபெறும் என்றும் அவர் கூறியிருந்தார். மேலும் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் கூறியுள்ளார்.  தற்போது சில தகவல்களை அவர் கூறியுள்ளார். வாக்கு எண்ணும் மையங்களில் மருத்துவ குழுக்கள் அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளார் வேட்பாளர்கள் முகவர்கள் வரும்போதுகொரோனா இல்லை சான்றிதழ் அல்லது முதல் கட்ட தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே அனுமதி என்று அறிவித்திருந்த நிலையில் தற்போது மேலும் ஒரு அறிவிப்பையும் சத்யபிரதா சாகு கூறியுள்ளார்.

அதன்படி தடுப்பூசி மற்றும் சான்றிதழ் போன்றவை இருந்தாலும் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் உடல் வெப்பநிலையானது 98.6 டிகிரிக்கு மேல் இருந்தால் அவர்களுக்கு உள்ளே செல்ல அனுமதி கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் மேஜை எண்ணிக்கை மாற்றம் குறித்து தேர்தல் அதிகாரி முடிவு செய்வார் என்றும் கூறியுள்ளார்.

From around the web