நள்ளிரவில் எண்ணெய் ஆலையில் பயங்கர தீவிபத்து!

 

ஆந்திராவில் நேற்று நள்ளிரவில் எண்ணெய் ஆலை ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக பல லட்ச ரூபாய் மதிப்புள்ள எண்ணெய் எரிந்ததாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன 

ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் என்ற பகுதியில் உள்ள பாரமவுண்ட் காக்ரோ இன்டஸ்ட்ரீஸ் என்ற எண்ணெய் ஆலையில் நேற்று நள்ளிரவு திடீரென தீப்பிடித்தது. இதனால் அந்த ஆலையின் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த எண்ணெய் டின்களிலும் தீ பற்றிக்கொண்டு கொழுந்துவிட்டு எரிந்ததால் அந்த பகுதியே செந்நிறமாக காட்சி அளித்தது 

oil factory1

இந்த தீ விபத்து குறித்த தகவல் அறிந்ததும் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் எண்ணெயில் தீ பற்றியது என்பதால் தண்ணீருக்கு கட்டுப்படாமல் தொடர்ந்து எரிந்ததாகவும் இதனால் பல லட்ச ரூபாய் மதிப்பிலான எண்ணெய் எரிந்து வீணானது என்றும் கூறப்படுகிறது இருப்பினும் நள்ளிரவு நேரம் என்பதால் தொழிலாளர் யாரும் எண்ணெய் ஆலையில் இல்லாததால் உயிர் சேதம் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த தீ விபத்து குறித்து விசாரணை நடந்து வருவதாகவும், முதல்கட்ட விசாரணையில் தீ விபத்துக்கு மின்சார கசிவு காரணம் என்றும் கூறப்படுகிறது

From around the web