ஆன்லைன் வகுப்புகள்: மத்திய அரசு வெளியிட்ட விதிமுறைகள் அறிவிப்பு

தமிழகம் உள்பட நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக ஆன்லைனில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது தனியார் பள்ளிகளில் பள்ளி கட்டணங்களை பெறுவதற்காகவே ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது மேலும் ஆன்லைன் வகுப்புகளை ஒரு குறிப்பிட்ட மணி நேரத்துக்கு மேல் நடத்தினால் மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படும் என்றும் பெற்றோர்கள் கூறி வருகின்றனர் இந்த நிலையில் ஆன்லைன் வகுப்புகள் குறித்த விதிமுறைகளை வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. ஒரு சில
 

ஆன்லைன் வகுப்புகள்: மத்திய அரசு வெளியிட்ட விதிமுறைகள் அறிவிப்பு

தமிழகம் உள்பட நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக ஆன்லைனில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

தனியார் பள்ளிகளில் பள்ளி கட்டணங்களை பெறுவதற்காகவே ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது

மேலும் ஆன்லைன் வகுப்புகளை ஒரு குறிப்பிட்ட மணி நேரத்துக்கு மேல் நடத்தினால் மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படும் என்றும் பெற்றோர்கள் கூறி வருகின்றனர்

இந்த நிலையில் ஆன்லைன் வகுப்புகள் குறித்த விதிமுறைகளை வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. ஒரு சில நாட்களில் இந்த விதிமுறைகள் வெளியிடப்படும் என்றும் அந்த விதிமுறைகளை பின்பற்றி ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது

இந்த நிலையில் சற்று முன் அந்த விதிமுறைகள் வெளியாகி உள்ளன அவை பின் வருவன:

1 முதல் 8ஆம் வகுப்பு வரை தலா 45 நிமிடங்கள் என 2 ஆன்லைன் வகுப்பு மட்டுமே நடத்த வேண்டும்

9 முதல் 12ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு 45 நிமிடங்களுக்கு மிகாமல் 4 வகுப்புகள் நடத்தலாம்

எல்.கே.ஜி., யூ.கே.ஜி. குழந்தைகளுக்கு 30 நிமிடங்கள் மட்டுமே ஆன்லைன் வகுப்புகள் நடத்த வேண்டும்

From around the web