பத்து ரூபாய் டாக்டர் மறைந்தார்! அதிர்ச்சி அடைந்த திமுக தலைவர் இரங்கல்!

பத்து ரூபாய் டாக்டர் போபால் மறைந்த செய்தியறிந்து அதிர்ச்சி அடைந்தேன் எனவும் திமுக தலைவர் மு க ஸ்டாலின் கூறுகிறார்
 
பத்து ரூபாய் டாக்டர் மறைந்தார்! அதிர்ச்சி அடைந்த திமுக தலைவர் இரங்கல்!

தமிழகத்தில் மிகவும் வலிமையான எதிர்க் கட்சியாக உள்ளது திமுக கட்சி. திமுக கட்சியானது நடந்த சட்டமன்ற தேர்தலில் தேசிய கட்சியான காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தன. மேலும் திமுக சார்பில் மு க ஸ்டாலின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தார்.மேலும் அவர் கடந்த முறை போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் மீண்டும் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தார். சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது.

stalin

மேலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பான முறையில் உள்ளது.சென்னையில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் மருத்துவர் ஒருவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த மருத்துவர் யார் என்றால் பத்து ரூபாய் டாக்டர் என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட கோபால் ஆவார்.  சென்னை வண்ணாரப்பேட்டை சேர்ந்த சமூக சேவை மருத்துவர் ஆவார். இதனை அறிந்த முகஸ்டாலின் சமூக சேவை மருத்துவர் கோபால் மறைந்த செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் மருத்துவத்தை சேவையாக செய்து பத்து ரூபாய் டாக்டர் என்று அடைமொழியைப் பெற்றார் எனவும் ஸ்டாலின் புகழாரம் கூறியுள்ளார். இந்த காலத்தில் மருத்துவத்தை தொழில், வியாபாரம் ஆகும் இந்த நேரத்திலும் டாக்டர் மருத்துவத்தை சேவையாக செய்தது அனைவருக்கும் சந்தோசத்தையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இளையதளபதி நடித்த மெர்சல் திரைப்படம் கதாபாத்திரம் கொண்டுவரப்பட்டதாகவும் அப்போது பேசப்பட்டது.

From around the web